கண் விழித்த இளம்பெண்ணுக்கு படுக்கையில் காத்திருத்த அதிர்ச்சி!

லண்டனைச் சேர்ந்த இளம்பெண் காலையில் கண் விழித்துப் பார்த்தபோது அவரது படுக்கையில் மலைப்பாம்பு இருந்தததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

படுக்கை

லண்டனைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஞாயிறு விடுமுறையில் தனது பொழுதைக் களித்துவிட்டு அந்தச் சோர்வில் படுக்கையில் உறங்கியுள்ளார். காலையில் கண்விழித்துப் பார்த்தபோது படுக்கையில் ஏதோ ஒரு பொருள் இருப்பது தெரிந்துள்ளது. நன்கு உறக்கம் தெளிந்து பார்த்தபோது படுக்கையில் 3 அடி நீள மலைப்பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிட்டு எழுந்து துள்ளிக்குதித்து அங்கிருந்து வேகமாக மற்றொரு அறைக்குச் சென்று கதவை தாழிட்டார். இதுகுறித்து உடனடியாக விலங்குகள் நல அமைப்புக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து. விலங்குகள் நல அமைப்பைச் சேர்ந்த ஜில் சேண்டர்ஸ் என்ற அதிகாரி அந்தப்பெண்ணின் வீட்டுக்கு விரைந்தார். ஆனால், அவர் வருவதற்குள் பாம்பு அங்கிருந்து சென்றுவிட்டது. அன்று மாலையே அதே பகுதியில் மற்றொரு வீட்டில் அந்தப்பாம்பு பிடிபட்டது.

இச்சம்பவம் குறித்துப் பேசியுள்ள விலங்குகள் நல அமைப்பைச் சேர்ந்த ஜில் சேண்டர்ஸ், தன் படுக்கையில் மலைப்பாம்பைக் கண்ட அந்தப்பெண் தன் வாழ்நாளில் அதிகபட்ச அச்சத்தை அப்போதுதான் அனுபவித்திருப்பார் என்றார். பாம்பைக் கண்டதும் படுக்கையிலிருந்து துள்ளிக் குதித்துள்ளார். மற்றொரு அறைக்குச் சென்று பாம்பு தப்பிச்செல்லாதவாறு கதவை தாழிட்டுவிட்டு எங்களுக்குத் தகவல் தெரிவித்தார். ஆனால் நாங்கள் அங்கு சென்றபோது பாம்பு அங்கு இல்லை. அந்தப்பெண்ணிடம் எங்களைத் தொடர்பு கொள்ளவதற்கான எண்ணைக் கொடுத்துவிட்டு வந்தேன். பிறகு மாலையில் அதே குடியிருப்புப் பகுதியிலிருந்து அழைப்பு வந்தது. மற்றொரு வீட்டில் அந்தப்பாம்பு பிடிபட்டது. அந்தப் பகுதியில் வசிக்கும் யாராவது செல்லப்பிராணியாக வளர்த்து வந்திருக்கலாம் என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!