சாலையோரம் புதைக்கப்பட்ட குண்டுகள் - பேருந்தில் பயணித்த 11 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானில், சாலையோரம் புதைக்கப்பட்ட குண்டுகள் வெடித்துச் சிதறியதில், பேருந்தில் பயணித்த 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

குண்டுகள்

மேற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஹார்ட் (Heart) என்ற இடத்திலிருந்து அதிகாலை 4:30 மணிக்கு காபூல் நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்து, ஃபாரா என்ற இடத்தைக் கடக்கும்போது, நடு வழியிலேயே வெடித்தது. இந்த விபத்தில், 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள் எனக் கூறப்பட்டுள்ளது. 

தாலிபான்கள், சாலையோரம் புதைத்திருந்த வெடிகுண்டுகள்மூலம் பாதுகாப்புப் படையினரைத் தாக்கத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், அந்தக் குண்டுகளால் எதிர்பாராத விதமாகப் பேருந்து வெடித்தது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், ஆப்கானிஸ்தானின் மிகப் பெரிய பயங்கரவாத அமைப்பு இதில் மிகவும் தீவிரமாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாகத் தீவிர விசாரணை நடைபெற்றுவருகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!