கணிதத் துறையின் உயரிய விருதைப் பெற்ற ஆஸ்திரேலியா வாழ் இந்தியர்! #NobelForMathematics

ஆஸ்திரேலியா வாழ் இந்தியரான அக்‌ஷய் வெங்கடேஷ், கணிதத் துறையின் உயரிய விருதைப் பெற்றுள்ளார். கடந்த 2006-ல் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கணித மேதை டெரன்ஸ் டவ்வுக்குப் பிறகு நோபல் பரிசு வென்ற இரண்டாவது ஆஸ்திரேலியர் இவர். 

நோபல் பரிசு அக்‌ஷய் வெங்கடேஷ் (இடது பக்கம் இருப்பவர்)

கணிதவியலுக்கான நோபல் பரிசு என்று அழைக்கப்படும் ஃபீல்ட்ஸ் பதக்கம், 40 வயதுக்கு உட்பட்ட சிறந்த கணிதவியலாளர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான ஃபீல்ட்ஸ் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஆஸ்திரேலியா வாழ் இந்தியர் அக்‌ஷய் வெங்கடேஷ் உட்பட, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியர் காசேர் பிர்கர் (Caucher Birkar), ஜெர்மனியைச் சேர்ந்த பீட்டர் ஸ்சோல்ஸி (Peter Scholze), இத்தாலியைச் சேர்ந்த அலேசியோ ஃபிகல்லி (Alessio Figalli) ஆகிய நான்கு பேர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

கணிதப் பாடங்களில் தனது ஆழமான பங்களிப்பை அளித்தமையால் இவ்விருதுக்குத் தேர்வாகியுள்ளார், அக்‌ஷய் வெங்கடேஷ் . டெல்லியைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், ஆஸ்திரேலியா பெர்த் நகரில் வளர்ந்தார். தனது 13 வயதில், ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தில் கணிதம் மற்றும் இயற்பியல் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றார். தற்போது, அமெரிக்காவில் வசித்துவரும் வெங்கடேஷ், ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராக உள்ளார். எண்ணியல் கோட்பாட்டில் நிபுணத்துவம் வாய்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. விருது பெறும் ஒவ்வொரு வெற்றியாளருக்கும் தலா 15,000 கனடிய டாலர் பரிசாக வழங்கப்படும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!