மகளிர் உலகக்கோப்பை ஹாக்கி - காலிறுதியில் இந்தியா தோல்வி!

மகளிர் உலகக்கோப்பை ஹாக்கித்தொடரின் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவுக்கும் அயர்லாந்துக்கும் இடையில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் ஷூட் அவுட் முறையில் இந்தியாவை வீழ்த்தி அயர்லாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த உலகக்கோப்பைத் தொடரில் ஏற்கனவே நடந்த ஆட்டமொன்றில் அயர்லாந்திடம் இந்தியா தோற்றிருந்ததால் இந்த காலிறுதி ஆட்டம் மிகுந்த பரபரப்புடன் நடைபெற்றது. ஆட்டத்தின் இரண்டு பாதியிலும் இரு அணியினராலும் கோல் எதுவும் போட முடியாததால் டைபிரேக்கர் ஆனது. 

ஹாக்கி

காலிறுதி ஆட்டத்தின் வெற்றியைத் தீர்மானிக்க ஷூட் அவுட் முறையில் ஒவ்வொரு அணிக்கும் தலா ஐந்து முறை கோல் அடிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் முதல் இரண்டு வாய்ப்பை இரு அணி வீராங்கனைகளும் தவறவிட்டனர். இந்நிலையில் மூன்றாவது மற்றும் நான்காவது வாய்ப்பில் அயர்லாந்து அணி வீராங்கனைகள் கோலடித்து 2 - 0 என்ற முன்னிலையைத் தந்தனர். இந்திய அணியின் ரீனா கோகர் நான்காவது வாய்ப்பை கோலாக மாற்றி முன்னிலையை 2 - 1 என்று குறைத்தார். ஆனால் ஐந்தாவது வாய்ப்பிலும் அயர்லாந்து அணி வீராங்கனை கோலடித்ததால் 3 - 1 என்ற கோல் கணக்கில் அயர்லாந்து வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. சனிக்கிழமையன்று நடைபெறவுள்ள அரையிறுதியில் அயர்லாந்து அணி ஸ்பெயினைச் சந்திக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!