‘நேரு முதல் மன்மோகன் சிங் வரை யாரும் செய்யாததை மோடி செய்துள்ளார் ’ - சுஷ்மா பெருமிதம்! | Nehru to Manmohan Singh, none addressed Indian community in other countries says Sushma Swaraj

வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (03/08/2018)

கடைசி தொடர்பு:08:49 (03/08/2018)

‘நேரு முதல் மன்மோகன் சிங் வரை யாரும் செய்யாததை மோடி செய்துள்ளார் ’ - சுஷ்மா பெருமிதம்!

'நேரு முதல் மன்மோகன் சிங் வரை இதுவரை யாரும் வெளிநாடுகளில் இந்தியச் சமூகம்குறித்துப் பேசியதில்லை. ஆனால், மோடி அதைச் செய்துள்ளார்' என சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். 

சுஷ்மா

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்,  அரசுமுறைப் பயணமாக கஜகஸ்தான், கிரிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். இந்த மூன்று நாடுகளுக்கும் அவர் செல்வது இதுவே முதல்முறை. சுஷ்மா, அந்த நாடுகளில் உள்ள உள்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் இரு நாட்டுக்கும் இடையேயான சில முக்கியப் பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். 

முதலாவதாக கஜகஸ்தான் சென்றுள்ள சுஷ்மா, நேற்று அஸ்தனா நகரில் உள்ள இந்தியச் சமூகத்தினருடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், ‘ இந்தியாவின் முதல் பிரதமரான நேரு முதல் மன்மோகன் சிங் வரை இதுவரை யாரும் வெளிநாடுகளில் இந்தியச் சமூகம் குறித்துப் பேசியது இல்லை. ஆனால், தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி அதைச் செய்துள்ளார். வெளியுறவு அமைச்சகம் வாரத்தின் 7 நாள்களும், 24 மணிநேரமும் இந்தியர்களுக்குச் சேவை செய்துகொண்டிருக்கிறது” என்று கூறினார். 

கஜகஸ்தானைத் தொடர்ந்து, அடுத்ததாக கிரிகிஸ்தான் செல்ல உள்ளார் சுஷ்மா. அதைத் தொடர்ந்து இறுதியாக ஆகஸ்டு 4-ம் தேதி உஸ்பெகிஸ்தான் செல்ல உள்ளார். அங்கு, இந்தியாவின் முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரின் நினைவிடத்தில் மரியாதைசெலுத்த உள்ளார்.


[X] Close

[X] Close