வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (03/08/2018)

கடைசி தொடர்பு:09:12 (03/08/2018)

இன்று தர்பூசணி நாள் - அப்படி என்ன சிறப்பு?

இன்று (ஆகஸ்டு 3),  தர்பூசணி நாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை கேளிக்கை நாளாகவும் அமெரிக்காவில் கொண்டாடுவார்கள்.

தர்பூசணி

கோடை என்றாலே நம் நினைவுக்கு வருவது குளிர்பானங்கள்,மாம்பழங்கள், தர்பூசணி, இளநீர், நுங்கு போன்றவைதான். கோடைக்காலங்களில் அதிகம் விற்பனையாகும் பழங்களின் பட்டியலில் தர்பூசணி தவிர்க்க முடியாத ஒன்று. தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. என்ன, இன்று தர்பூசணியின் பெருமை பேச வேண்டுமா என்று கேட்டால், ஆம் என்றுதான் சொல்ல வேண்டும். இன்று தர்பூசணி நாள். ஆண்டுதோறும் ஆகஸ்ட் 3-ம் தேதி தர்பூசணி நாளாகக் கொண்டாடப்படுகிறது. 

பெப்போ என்னும் பெர்ரி வகையைச் சேர்ந்த தர்பூசணி, தென்னாப்பிரிக்காவை பிறப்பிடமாகக்கொண்டது. இதில், 92 சதவிகிதம் நீர் உள்ளது, அதிக நீர் உள்ள பழங்களில், முதன் முதலில் பயிரிடப்பட்டது தர்பூசணிதான் என்ற பெருமையை இது பெற்றுள்ளது. உலகில் உள்ள அதிகமான மக்களால் விரும்பப்படுவது, இது மிகவும் மிருதுவாக உள்ளதால், குழந்தைகள் அதிகம் விரும்பி உண்ணும் பழங்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 

சீனாவில்தான் அதிக தர்பூசணிகள் பயிரிடப்படுகிறது. தர்பூசணி நாள் தொடர்பான முழுமையான எந்த வரலாறும் சரியாகக் கிடைக்கவில்லை. இதுவரை 1200-க்கும் அதிகமான தர்பூசணி வகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தர்பூசணியில் அதிக அளவு இரும்புச்சத்து, ​வைட்டமின் சி, ஏ, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்தும் உள்ளன. தர்பூசணியின் சிவப்பு நிற சதைப்பகுதியில் உள்ள சத்தைவிட, அதிகளவு சத்து அதன் வெள்ளை நிற அடிப்பகுதியில்தான் உள்ளது. அதை அப்படியே உண்ணலாம். இல்லை, கூட்டுபோல சமைத்தும் சாப்பிடலாம். ஆண்டுதோறும் தர்பூசணி நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆகஸ்ட் 3-ம் தேதியும் அமெரிக்காவில் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.