டேக்ஆஃப் ஆகாமல் ரன்வேயை விட்டு ஓடிய விமானம்! உயிர் தப்பிய 150 பயணிகள்

ரியாத்தில் இருந்து மும்பைக்குச் சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானம், ரன்வேயை விட்டு விலகி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. ``விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்'' என ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

விமானம்

சவுதி அரேபியா, ரியாத் விமான நிலையத்தில் இருந்து ஜெட் ஏர்வேஸின் 9W523-ரக விமானம் இன்று அதிகாலை 150-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மும்பைக்குப் புறப்பட்டது. அப்போது, விமானம் டேக்ஆஃப் ஆகாமல் திடீரென ஓடு பாதையை விட்டு விலகி ஓடியது. விமானிகள் எடுத்த சாதுர்ய நடவடிக்கையால் விமானம் பத்திரமாக நிறுத்தப்பட்டது.

இதுதொடர்பாக ஜெட் ஏர்வேஸ் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், `9W523-ரக விமானம், ரியாத்தில் இருந்து மும்பைக்கு இன்று காலை புறப்பட்டுச் சென்றது. இதில், 147 பயணிகள் 7 ஊழியர்கள் பயணித்தனர். விமானம் ரன்வேயில் சென்றுகொண்டிருந்தபோது, டேக்ஆஃப் ஆகாமல் ஓடுபாதையை விட்டு விலகிச்சென்றது. இதனால், டேக்ஆஃப் கைவிடப்பட்டது. உடனடியாக, விமானிகள் சாமர்த்தியமாக விமானத்தை நிறுத்தினர். விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் எங்கள் குழுவினருக்கும் எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை. அவர்கள் அனைவரும் பத்திரமாக விமானத்தில் இருந்து மீட்கப்பட்டு, விமான நிலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!