`ஜீன்ஸ் பூட்..’ - ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஜெனிஃபர் லோபஸ்! #Viral

ஹாலிவுட் பிரபலம் ஜெனிஃபர் லோபஸ், சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் அணிந்திருந்த டெனிம் ரக ஆடை, ட்விட்டரில் பேசும் பொருளாகியுள்ளது.  

ஜெனிஃபர் லோஃபஸ்
 

கடந்த புதன்கிழமை நியூயார்க் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்த ஜெனிஃபர் லோபஸ் வித்தியாசமான ஆடையை அணிந்திருந்தார். அவர் காரிலிருந்து இறங்கியதும் சுற்றி இருந்த அனைவரும் ஒரு நொடி ஸ்தம்பித்து விட்டனர். வெள்ளை நிற சட்டை,  ஜீன்ஸ் மெட்டீரியலில் பூட்... இதுதான் ஜெனிஃபர் அணிந்து வந்த அந்தப் புதிய ஃபேஷன் ஆடை. 

ஜெனிஃபர்

பொதுவாக, ஹாலிவுட்  ஆடை வடிவமைப்பாளர்கள்,  வித்தியாசமான ஆடைகளை வடிவமைப்பதில் அதிகம் கவனம் செலுத்துவார்கள். அவ்வாறான ஆடைகள் முதலில் பார்க்கும்போது `இதெல்லாம் ஒரு காஸ்ட்யூமா?’ என்று யோசிக்க வைக்கும். ஆனால், பார்க்கப் பார்க்க `நல்லாதானே இருக்கு’ என்று நினைக்க வைத்துவிடும். பின்னர் உலகம் முழுவதும் ட்ரெண்ட் ஆகிவிடும். இப்படி ட்ரெண்ட் செட்டர்களாக வலம்வரும் ஹாலிவுட் ஃபேஷன் டிசைனர்களின் சிந்தையில் உதித்ததுதான் ஜெனிஃபர் அணிந்து வந்த  `ஜீன்ஸ் பூட்’ ஆடை. வெர்சேஸ் என்னும் சர்வதேச ஆடை வடிவமைப்பு ப்ராண்ட் அறிமுகப்படுத்திய ஆடை இது.

ஜெனிஃபர்
 

`வெர்சேஸ் ரிசார்ட் 2019’ (Versace Resort19) என்னும் ஃபேஷன் கலெக்‌ஷனில் இடம்பெற்றிருக்கும் இந்த ஆடையை ஜெனிஃபர் பிரபலப்படுத்திவிட்டார். வெள்ளைச் சட்டைக்கு நீல நிற ஜீன்ஸ் பூட் மட்டும் அணிந்து, ஜெனிஃபர் லோபஸ் அணிந்து வலம்வரும் புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. அதேசமயம்  `ட்ரெண்ட் செட்டர் ஜெனி..’ என்று பலர் பாராட்டி வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!