வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (04/08/2018)

கடைசி தொடர்பு:19:00 (04/08/2018)

`உலகின் சூப்பர் ஸ்டார் விராட் கோலி!’ ஸ்டீவ் வாக் புகழாரம்

`இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, உலகின் சூப்பர் ஸ்டார்' என ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஸ்டீவ் வாக் புகழாரம் சூட்டியுள்ளார்.

டெஸ்ட்

இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இந்தியாவும், ஒருநாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியுள்ளன. இரு அணிகளும் மோதும், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பர்மிங்ஹாமில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 149 ரன்களை குவித்தார்.

சரிவை நோக்கி சென்றுகொண்டிருந்த அணியை விராட் கோலி களத்தில் இறங்கி மீட்டார். அவருடைய ஆட்டம் அணிக்கு மேலும் பலத்தைக் கூட்டியது. இந்நிலையில் விராட் கோலியின் ஆட்டத்திறன் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக், `விராட் கோலி உலகின் சூப்பர் ஸ்டார், சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து சாதனைகளையும் அவர் தகர்ப்பார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

This guy is a global superstar. Will break all records in world cricket. @virat.kohli #india #ultimatecompetitor #passion

A post shared by Steve Waugh (@stevewaugh) on