வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (04/08/2018)

கடைசி தொடர்பு:22:30 (04/08/2018)

`என் மகன் கூச்ச சுபாவமுடையவன்’ - முதன்முதலாக மனம் திறந்த ஒசாமா பின்லேடனின் தாய்!

ஒசாமா பின்லேடன் கூச்ச சுபாவமுடையவன் என அவரின் தாயார், அலியா கனெம் தெரிவித்துள்ளார். மேலும் ஓசாமாவை மூளைச்சலவை செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

ஒசாமா பின்லேடன்

`ஓசாமா பின்லேடன் - இவரை அறியாதவர்கள் இருக்க முடியாது. அமெரிக்காவில் நடந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு அல்கொய்தா காரணம் எனக் குற்றம்சாட்டிய அமெரிக்க அரசு, அதன் தலைவர் ஒசாமா பின்லேடனை முக்கியக் குற்றவாளியாக அறிவித்தது. இதையடுத்து ஒசாமா பின்லேடன் தலைமறைவானார். அவரை ராணுவம் கொண்டு தேடி வந்தது அமெரிக்கா. இதைத்தொடர்ந்து, 2011-ம் ஆண்டு மே மாதம் ஒசாமா பின்லேடனை அமெரிக்க ராணுவப்படைகள் சுட்டுக்கொன்றன. இந்நிலையில் பின்லாடன் தயார் அலியா கனெம் பிரிட்டிஷ் நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார். முதன்முறையாகத் தன் மகன் பின்லேடன் குறித்து பேசிய அவர் பல்வேறு தகவல்களைத் தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில் `மற்றவர்களுடன் பேசுவதிலும் பழகுவதிலும் கூச்ச சுபாவமுடையவன் பின்லேடன். பள்ளியில் படிக்கும்போது நல்ல சிறுவனாக வளர்ந்து வந்தான். ஒசாமா தனது 20-வது வயதில், கின் அபுலாசிஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்துக்கொண்டிருந்தான். அப்போதுதான் அவன் மூளைச்சலவை செய்யப்பட்டான். அங்கிருந்தவர்கள் அவனை மாற்றத் தொடங்கினர். அவர்களிடமிருந்து ஒதுங்கி இரு என நான் பலமுறை அவனிடம் கூறினேன். அவன் அதை கேட்கவே இல்லை. அவனுக்கு என்னை மிகவும் பிடிக்கும். இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு மகன்தான் காரணம் எனக் கூறுவது சங்கடத்துக்குள்ளாக்கியுள்ளது’ என்று அவர் தெரிவித்தார்.