இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் - சுனாமி எச்சரிக்கை! | Earthquake in Indonesia, triggers tsunami warning

வெளியிடப்பட்ட நேரம்: 19:34 (05/08/2018)

கடைசி தொடர்பு:19:34 (05/08/2018)

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் - சுனாமி எச்சரிக்கை!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் சுமார் 17 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். 

நில நடுக்கம்

இந்தோனேசியாவின் லோம்போக் தீவு பகுதியில் சற்று முன்னர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7 ஆக பதிவானது. இதனால் மக்கள் அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேறினர். இதனால் சாலைகளில் மக்கள் பெருமளவில் கூடினர். இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பு வெகு தொலையில் இருந்தும் உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். 

இதனையடுத்து, இந்தோனேசிய நாட்டின் வானிலை ஆய்வு மையம் அந்நாட்டு மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. கடற்கரையில் இருக்கும் மக்களை உயரமான பகுதிக்கு செல்லுமாறு எச்சரித்துள்ளது. இதனால் இந்தோனேசியா மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இது சக்தி வாய்ந்ததாகப் கருதப்படுகிறது. தற்போது வரை இந்த நிலநடுக்கத்தில் சுமார் 17 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


[X] Close

[X] Close