`என் கணவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் தூக்கிலிடத் தயார்' - பீகார் அமைச்சர்! | 'My husband is ready to hang up if it is proved guilty' - Bihar minister

வெளியிடப்பட்ட நேரம்: 23:28 (05/08/2018)

கடைசி தொடர்பு:10:01 (06/08/2018)

`என் கணவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் தூக்கிலிடத் தயார்' - பீகார் அமைச்சர்!

பாலியல் வன்கொடுமை வழக்கில் என் கணவர் குற்றவாளியாக என நிரூபிக்கப்பட்டால் அவரை தூக்கிலிடத் தயங்கமாட்டேன் என பீகார் அமைச்சர் மஞ்சு வெர்மா தெரிவித்துள்ளார்.

பீகார் அமைச்சர்


பீகார் மாநிலம், முசாஃபர்பூர் மாவட்டத்தில் தொண்டு நிறுவனம் சார்பில் காப்பகம் ஒன்று இயங்கி வருகிறது. அந்தக் காப்பகத்தில் உள்ள சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், காப்பகத்தைச் சுற்றியுள்ள பகுதியில் சிறுமி ஒருவர் புதைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியானது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பிரஜேஷ் தாகூர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக நடத்திய விசாரணையில் முசாஃபர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ரவிக்குமார் ரௌஷனும் ஒருவர் என்ற தகவல் வெளியானது. இந்நிலையில், பீகார் மாநில அமைச்சர் மஞ்சு வெர்மாவின் கணவர் சந்தேஷ்வருக்கும், சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்பு இருப்பதாக  புகார் எழுந்தது. இதையடுத்து அமைச்சரை பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். இது தொடர்பாக பேசிய மஞ்சுளா வெர்மா, `அரசியல் காரணமாக இந்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இதில் உண்மையிருக்க வாய்ப்பில்லை. இருக்கும்பட்சத்தில் அவரைத் தூக்கிலிடுவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை' என்று தெரிவித்துள்ளார்.


[X] Close

[X] Close