பற்றி எரியும் காட்டுத்தீ - கலிபோர்னியா வரலாற்றில் 5-வது மிகப் பெரும் பேரழிவு

கலிபோர்னியா மாகாணத்தில் பற்றி எரியும் காட்டுத்தீயால் பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இது கலிபோர்னியா வரலாற்றிலேயே 5-வது மிகப் பெரிய பேரழிவு எனக் கூறப்பட்டுள்ளது.

கலிஃபோர்னியா

photo Credits ; Twitter/@FirefighterCloseCall

கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள மெண்டோசினோ காம்ப்ளக்ஸ் என்ற பகுதியில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாகக் காட்டுத்தீ தொடர்ந்து எரிந்துகொண்டே வருகிறது. இதனால் 2 லட்சத்துக்கும் அதிகமான ஏக்கர் நிலங்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. கோடை வெப்பத்தின் காரணமாக காட்டுத்தீ ஏற்பட்டதாகவும்  இந்தக் காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 7 பொதுமக்கள் மற்றும் நான்கு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சாக்ரமெண்டோ என்ற இடத்தில் சனிக்கிழமை இரவு மட்டும் 25 சதவிகிதம் அதாவது 400 ஏக்கர் நிலம் எரிந்துவிட்டதாக அம்மாகாண தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தக் காட்டுத்தீ கலிபோர்னியா வரலாற்றிலேயே 5-வது மிகப் பெரிய பேரழிவு என கூறப்படுகிறது. தீயை அணைக்கத் தீயணைப்பு வீரர்கள் பல்வேறு முயற்சிகள் செய்தும் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்தது. மேலும், வனப் பகுதிகளில் அதிகமான காற்று வீசுவதால், தீ மற்ற இடங்களுக்கு வேகமாகப் பரவி வருவதாகவும் எதிர்பாராத புதிய இடங்களில் திடீரென தீ பரவுவதால் தீயணைக்கும் பணிகளில் தாமதம் நிலவுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கலிஃபோர்னியா காட்டுத்தீயை மிகப்பெரிய பேரழிவாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!