தீவிரவாதி மகளுடன் திருமணம்! - அமெரிக்காவைப் பழிவாங்கத் துடிக்கும் பின்லேடன் மகன் | Osama's son marriage and his future plan

வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (06/08/2018)

கடைசி தொடர்பு:18:45 (06/08/2018)

தீவிரவாதி மகளுடன் திருமணம்! - அமெரிக்காவைப் பழிவாங்கத் துடிக்கும் பின்லேடன் மகன்

ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின் லேடன், இரட்டைக் கோபுரம் தகர்ப்புச் சம்பவத்தின் முக்கியக் குற்றவாளியின் மகளைத் திருமணம் செய்துள்ளார்.  

ஹம்சா
 

அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் முன்னாள் தலைவர் ஒசாமா பின் லேடனின் சகோதரர், அகமத்  மற்றும் ஹசன் அல் அட்டாஸ்,    `The Guardian’ ஊடகத்துக்குப் பேட்டியளித்தபோது, பின் லேடன் மகனின் திருமணம் குறித்துப் பேசியுள்ளனர். 

இரட்டைகோபுரம்
 

கடந்த 2001-ம் ஆண்டு, நியூயார்க் இரட்டைக் கோபுரம் தகர்ப்புக்கு விமானத்தைக் கடத்திய தீவிரவாதி முகமது அட்டாவின் மகளைத்தான் ஒசாமாவின் மகன் ஹம்சா திருமணம் செய்துள்ளதாக அகமத் குறிப்பிட்டுள்ளார். மேலும், சில திடுக்கிடும் தகவல்களையும் அவர் வெளியிட்டுள்ளார். 

பின் லேடனின் சகோதரர்கள், ஹம்சா குறித்துப் பகிர்ந்த தகவல்கள் பின்வருமாறு...

`ஹசன் முகமது அட்டாவின் மகளை மணந்துள்ளார். இப்போது அவர்கள், ஆப்கானிஸ்தானில் வசிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.  ஹசன் தற்போது அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் முக்கிய தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். அவர், தன் தந்தையைக் (ஒசாமா) கொன்றவர்களைப் பழிவாங்கத் திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறார்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஒசாமா பின்லேடன்
 

கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், நியூயார்க் சென்ற இரண்டு விமானங்களை  நியூயார்க்கில் இருந்த இரட்டைக் கோபுரத்தின்மீது மோதச் செய்தனர். உலகின் வர்த்தகக் கேந்திரமாக விளங்கிய இந்த 2 கோபுரங்களும், முற்றிலுமாக நிலைகுலைந்துபோயின. இந்தத் தாக்குதலில்  2,977 பேர் கொல்லப்பட்டனர்.  இந்தச் சம்பவந்தால் கொந்தளித்துப்போன அமெரிக்கா, கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம், பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த ஒசாமா பின் லேடனை, ட்ரோன் விமானம் மூலம் தாக்கிக் கொன்றது.

ஒசாமா இறப்புக்குப்பின், அல்கொய்தா தீவிரவாத அமைப்பின்  முக்கியப் புள்ளியாக ஒசாமாவின் மகன் ஹம்சா செயல்பட்டுவருகிறார். அவரை மேற்கத்திய உளவுத்துறை அமைப்புகள் தொடர்ந்து கண்காணித்துவருகிறது. இந்நிலையில், ஹம்ஸா அமெரிக்காவைப் பழி வாங்கத் திட்டம் தீட்டிவருவதாக ஒசாமாவின் சகோதரர்கள் வெளியிட்டுள்ள திடுக் தகவலால் புலனாய்வு அமைப்புகள் அலெர்ட்டாக உள்ளன! 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close