`ஆவிகள் மேல் தீரா மோகம்..!' - இங்கிலாந்து பெண்ணின் விசித்திரமான ஆசை

ஆவிகளுடன் உறவு வைத்துக்கொள்வது சாத்தியம் என்கிறார் ஆவிகள் உலகின் ஆலோசகரான அமேதிஸ்ட் ரெல்ம். ஆவிகளுடன் கொண்ட தீரா அன்பினால் குழந்தை பெற்றெடுக்கும் முயற்சியிலும் அவர் இறங்கியுள்ளார். 

ஆவிகள் ஆலோசகர்  அமேதிஸ்ட் ரெல்ம்

Photo Credit- ITV

இங்கிலாந்து பிரிஸ்டலை நகரைச் சேர்ந்தவர் அமேதிஸ்ட் ரெல்ம். ஆவிகள் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் ஆலோசகராகத் தன் வாழ்க்கைப் பாதையை அமைத்துக்கொண்டார். இந்நிலையில், கடந்த ஆண்டு அந்நாட்டு உள்ளூர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருக்கிறார். அப்போது, `தான் ஆவிகளுடன் நல்லுறவைப் பேணி வருவதாகவும்; மனிதர்களை விடவும் ஆவிகள் தன்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பதாகவும்' கூறி அன்றைய தினத்தில் பரபரப்பைக் கிளப்பினார். 

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் பிரபல வார இதழான நியூ ஐடியா-வுக்கு அவர் அளித்துள்ள பேட்டி `இதுவும் சாத்தியமாகுமா?' என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. அமேதிஸ்ட் அளித்தப் பேட்டியில், `என்னால் ஆவிகளை நன்கு உணர முடியும். அதோடு ஆவிகளை வித்தியாசப்படுத்திக்கொள்ளவும் முடியும். செடி கொடிகள் சூழ்ந்த புதர் நடுவே நடந்து சென்றபோது, எனது முதல் ஆவிக் காதலனை சந்தித்தேன். அவருடன், ஏற்பட்ட அதீத அன்பால் உறவுகொண்டேன். இதை அறிந்த மற்றொரு ஆவி, என்னிடம் கோபித்துக்கொண்டு சென்றுவிட்டது. இதனால், ஆவிகளுடனான உறவைப் பலப்படுத்த சீரியஸ் ஆக முயற்சி செய்து வருகிறேன்' என்றவரிடம், 

ஆவிகளுடன் உறவு வைத்துக்கொள்வது சாத்தியமா; குழந்தை பெற்றெடுக்க முடியுமா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு, அமேதிஸ்ட் ரெல்ம் கூறிய பதில் வியப்படையச் செய்திருக்கிறது. அதாவது, `ஆவிகளுடன் உறவுகொண்டு குழந்தை பெற தீவிரமாக இருக்கிறேன். ஆவிகளுடன் உறவு வைத்துக்கொள்ள முடியும். நீண்ட காலமாக ஒருவருடன் உறவில் இருக்கிறேன். இது முற்றிலும் கேள்விக்குறியானது என்று நான் நினைக்கவில்லை. இது சாத்தியமான ஒன்றுதான்' என்று கூறி மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!