டிரக் வாகனத்தோடு மோதிய பெட்ரோல் டேங்கர் லாரி! - விண்ணை முட்டிய தீப்பிழம்பு

த்தாலி நாட்டில், நடுரோட்டில் வெடித்த டேங்கர் லாரியிலிருந்து தீப்பிழம்புகள் எழும்பியது. இந்த விபத்தில் ஒருவர் பலியானார். 

டேங்கர் லாரி

இத்தாலி நாட்டில் உள்ள போலோங்னா நகரில், சாலையில் சென்றுகொண்டிருந்த டிரக் மீது பின்னால் வந்த டேங்கர் லாரி மோதியதில் இரண்டு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்துள்ளன. இந்த வீடியோவை அந்நாட்டு காவல்துறையினர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோ காட்சியில், நீளமான ரோட்டில் அனைத்து வாகனங்களும் அமைதியாகச் சென்றுகொண்டிருந்தன. அப்போது ஒரு டிரக் முன்னோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அதைத் தொடர்ந்து, பெட்ரோல் நிரப்பிய ஒரு டேங்கர் லாரி சற்று வேகமாகச் சென்று டிரக்கை மோதியபடி நிற்கிறது. அடுத்த சில நிமிடங்களில், லாரியின் பின்புறத்தில் சிறிய அளவில் தீப்பற்றி எரிந்தது. அடுத்த சில நொடிகளில், பலத்த சத்தத்துடன் பெட்ரோல் டேங்கர் வெடித்துச் சிதறியது. இதனால் எழுந்த நெருப்பு விண்ணை முட்டும் அளவுக்கு பயங்கரமாக  எழுந்தது. இந்த திகிலூட்டும் காட்சிகள் தற்போது, சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டுவருகின்றன.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 50 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து போலோங்னா நகரில் உள்ள விமானநிலையத்துக்கு அருகில் நடைபெற்றதாகவும், இதனால் அருகில் இருந்த சில வாகனங்கள் தீயில் கருகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'போக்குவரத்து நெரிசலே இல்லாத சாலையில் நடந்த இந்த விபத்து, திட்டமிட்ட சதியா?' என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!