நெகிழவைக்கும் திமிங்கிலத்தின் தாய்ப்பாசம்! வைரலாகும் புகைப்படம்

திமிங்கிலம் குட்டி போடும் படம்

PC: Michael Milstein/AP

தாய்மை என்பது மனிதர்களுக்கு மட்டுமேயானது அல்ல. எத்தனையோ உயிரினங்கள் மனிதர்களை விடப் பாசம் மிகுந்தவை. குறிப்பாக, தனது குட்டியின்மீது தாய் விலங்குகள் காட்டும் பாசம் நெகிழ்ச்சியானவை. அதை உலகுக்குத் தெரியவைக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடப்பதுண்டு. அப்படி ஒரு சம்பவம் வாஷிங்டன் நகரில் நடந்திருக்கிறது. இந்த முறை நம்மை நெகிழச்செய்த விலங்கு, திமிங்கிலம்.

இறந்த குட்டியுடன் திமிங்கிலம்

PC: Michael Milstein/AP

சென்ற மாதம் 24-ம் தேதி, 20 வயதாகும் ஜே35 என்றழைக்கப்படும் திமிங்கிலம், குட்டி ஒன்றை ஈன்றது. துரதிர்ஷ்டவசமாக அந்தக் குட்டி இறந்துபோனது. அன்றே அதை புகைப்படம் எடுத்திருந்தார்கள்  NOAA Fisheries அமைப்பைச் சேர்ந்தவர்கள். இவர்கள், இந்தக் கடல் பகுதியிலிருக்கும் விலங்குகளைக் கண்காணித்துவருபவர்கள். நேற்று (ஆகஸ்ட் 8), மீண்டும் அந்தத் திமிங்கிலத்தை அதே அமைப்பைச் சேர்ந்த மைக்கேல் ( Michael Milstein) என்பவர் புகைப்படம் எடுத்திருக்கிறார். அப்போது, இறந்துபோன தனது குட்டியைத் தூக்கிக்கொண்டு அலைந்திருக்கிறது ஜே35 திமிங்கிலம். இந்தப் படம் தற்போது வைரலாகியுள்ளது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!