சிறைக்கு அனுப்பியதால் ஆவேசம்! - மனைவியைக் கொல்ல விமானத்தைப் பயன்படுத்திய கணவருக்கு நடந்த சோகம்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறை அடுத்து விமானத்தைத் தனது சொந்த வீட்டின் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய அமெரிக்கர், அந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். 

விமான விபத்து

Photo Credit: Twitter/SharaPark

அமெரிக்காவின் உடா மாகாணத்தைச் சேர்ந்தவர் டுயோன் யோட். 47 வயதான யோட், விமானத்தை இயக்குவதில் கை தேர்ந்தவராகவும் இருந்திருக்கிறார். தன் மனைவியுடன் அடிக்கடி வாக்குவாதத்தில் யோட் ஈடுபட்டு வந்திருக்கிறார். இந்த நிலையில், மனைவியைத் தாக்கியதாக யோட் மீது குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீஸார் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்திருக்கின்றனர். விசாரணைக்குப் பின்னர் ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த யோட், அருகிலிருந்த ஸ்பானிஷ் ஃபோர்க் ஸ்பிரிஞ்வில்லே விமான நிலையத்துக்குச் சென்று, விமானம் ஒன்றை எடுத்துக்கொண்டு வீட்டின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அந்த விமானம், யோட் பணிபுரியும் நிறுவனத்துக்குச் சொந்தமானது என போலீஸார் தெரிவித்தனர். 
அதிகாலை 2.30 மணியளவில் வீட்டின் முன்பகுதியில் விமானத்தை மோதி யோட் ஏற்படுத்திய இந்த விபத்தில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதேநேரம், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த யோடின் மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள உடா மாகாண போலீஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் யோடின் வீட்டு முன்பகுதி முற்றிலுமாக சிதைந்து போனது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!