ஆப்கான் குண்டுவெடிப்பில் 48 மாணவர்கள் பலி! 

ப்கானிஸ்தான் நாட்டில், பள்ளி ஒன்றின் வகுப்பறையில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பில், 48 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

மாணவர்கள்

காபுல் நகரில் தாஷ்த் இ பார்ச்சி என்ற பகுதியில் செயல்பட்டுவரும் தனியார் கல்வி மையத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வுக்காக மாணவர்கள் தீவிரமாகப் படித்துவந்தனர். அப்போது, கல்வி நிறுவனத்துக்குள் புகுந்த தற்கொலைப்படையைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவர், வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார். இந்தக் குண்டுவெடிப்பில் சிக்கிய 67 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

குண்டுவெடிப்பில் உயிரிழந்த மாணவர்கள் அனைவரும் 18 வயதுக்கும் குறைவானவர்கள் என்று, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தக் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்காத நிலையில், ஐ.எஸ் தீவிரவாத அமைப்புதான் இதைச் செய்திருக்கும் என ஷியா முஸ்லிம் கவுன்சில் கூறியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில், தனியார் கல்வி மையத்துக்குள் நடந்துள்ள மாபெரும் குண்டுவெடிப்புச் சம்பவம், அந்நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!