சூடானில் படகு கவிழ்ந்து விபத்து... நீரில் மூழ்கி 22 மாணவர்கள் உயிரிழப்பு

சூடானில் உள்ள நைல் நதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 22 மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் மேலும் ஒரு பெண் பலியானார். 

படகு கவிழ்ந்து விபத்து

சூடான் தலைநகர் கார்டவும் பகுதியில் இருந்து சுமார் 750 கிலோ மீட்டர் தூரத்தில், வடக்கே அமைந்துள்ள நைல் நதியில் படகு ஒன்று பயணித்துக்கொண்டிருந்தது. அதில் 40 மாணவர்கள் பயணம்செய்துள்ளனர். இயந்திரக் கோளாறு காரணமாக திடீரெனப் படகு பழுதாகி நின்றது. சில நிமிடங்களிலேயே அது தண்ணீரில் மூழ்கி, அனைவரும் உயிரிழந்தனர். இது, முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. `முறையான பாதுகாப்பு உபகரணங்கள் படகில் இல்லாததால் பலர் உயிரிழக்க நேர்ந்துள்ளது’ என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

இந்தச் சம்பவத்தில் பலியான மாணவர்களின் சடலங்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. படகு கவிழ்ந்து மாணவர்கள் 22 பேர் பலியான சம்பவம், சூடான் நாட்டு மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!