கேட்டது ஹெல்த் உணவு... வந்தது முதலை பார்சல்... அதிர்ந்துபோன ஆன்லைன் வாடிக்கையாளர்

நவீன காலத்தில் ஆன்லைன் மூலம் உபயோகப் பொருள்களை வாங்குவதையே பெரும்பாலானோர் விரும்புகின்றனர். இதற்கென, பிரத்யேகமாக வர்த்தக நிறுவனங்கள் இயங்குகின்றன.

ஆன்லைன் பார்சல்

Photo Credit -shanghai.ist

நேரடியாகக் கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்குவதைக் காட்டிலும் ஆன்லைன்மூலம் அதிரடி தள்ளுபடிகளுடன் குறைந்த விலையில் பொருள்களை வாங்கலாம். அதே வேளையில், நேரத்தையும் மிச்சப்படுத்தலாம் என்றே ஆன்லைன் வர்த்தகத்தை வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர். ஆன்லைனில் வாங்கும் அனைத்துப் பொருள்களும் நாம் எண்ணியதுபோல் வருவதில்லை. இதேபோல், சீனாவிலும் ஒரு சம்பவம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடந்துள்ளது. 

சீனாவில் உள்ள சுஜாங்க் (Suichang) நகரில் வசித்துவரும் ஷாங் (Zhang) என்ற பெண் உடல்நலத்துக்காகச் சில ஹெல்த் சப்ளிமென்ட் பொருள்களை ஆன்லைனில் ஆடர் செய்துள்ளார். குறிப்பிட்ட தேதியில் அவர் ஆடர் செய்த பொருள் நிறுவனத்தால் அவரது முகவரிக்கு டெலிவரி செய்யப்பட்டது. மூன்று பொருள் பெட்டிகள் சரியாக வந்துள்ளன. ஆனால், நான்காவது பொருள் பெட்டியில்தான் அந்தப் பெண்ணுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அளவில் சற்று வித்தியாசமாக இருந்த அப்பெட்டியை அவர் திறந்தபோது, உயிரிழந்த ஒரு முதலைக் குட்டியும் பல்லியும் இருந்துள்ளன. இதைச் சற்றும் எதிர்பார்க்காத அவர்கள், உடனடியாகப் போலீஸில் புகார் அளித்துள்ளனர். 

இதையடுத்து, நடத்திய விசாரணையில் அந்த முதலை இனவிருத்தி பண்ணையிலிருந்து கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. இறந்த முதலையிலிருந்த க்யூஆர் கோடு மூலம் அடையாளம் காணப்பட்டது. சீனாவில் உள்ள உயிரின வளர்ப்பு பண்ணைகளில் முதலை வளர்ப்பது சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த முதலை வளர்ப்புக்காகப் பண்ணைக்கு கொரியர் மூலம் அனுப்பப்பட்டது. பெட்டிகளில் உயிருடன் அனுப்பப்பட்ட அவை நாள்கள் கடந்துவிட்டதால் இறந்துவிட்டன. தவறான முகவரியில் இதை டெலிவரி செய்துவிட்டதாகப் போலீஸார் தெரிவித்தனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!