பதவியேற்பு விழாவில் தடுமாற்றம்! - உருது வார்த்தைகளைத் தவறாக உச்சரித்த இம்ரான்கான் | imran Khan didn't pronounce Urdu words properly while taking oath

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (18/08/2018)

கடைசி தொடர்பு:21:00 (18/08/2018)

பதவியேற்பு விழாவில் தடுமாற்றம்! - உருது வார்த்தைகளைத் தவறாக உச்சரித்த இம்ரான்கான்

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது, உருது வார்த்தைகளை உச்சரிப்பதில் திணறினார்.

இம்ரான் கான் பதவியேற்பு விழா

பாகிஸ்தானில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர், இம்ரான் கானின் தெஹ்ரீக் -இ- இன்சாப் கட்சி வெற்றி பெற்று, சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைக்கிறது. இந்நிலையில் இன்று இஸ்லாமாபாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில், பதவி ஏற்பு விழா நடைபெற்றது. அதிபர் மம்னூன் உசேன், இம்ரான்கானுக்குப் பதவி பிரமாணம் செய்துவைத்தார். அப்போது, கண்கலங்கியபடி உறுதிமொழி ஏற்புவிழாவில் பதற்றத்துடன் காணப்பட்டார் இம்ரான் கான். உருது வார்த்தைகளை உச்சரிப்பதில் அவர் திணறினார். அதிபர் உசைன், `ரோஸ் -ஹெ- கியாமத்' (தீர்ப்பு நாளில்) என்று குறிப்பிடும்போது, இம்ரான்கான் அதைச் சரியாக உள்வாங்கவில்லை. அந்த வார்த்தையை அவரால் சரியாக உச்சரிக்க முடியவில்லை. அதிபர் கூறிய வார்த்தையை, `ரோஸ்-ஹெ- கியாதத்' (தலைமையின் நாளில்) என்று மாற்றிக் கூறினார். அந்த வார்த்தையின் அர்த்தம் முழுவதும் மாறிப்போனது. பின்னர், தான் கூறிய வார்த்தை தவறானது என அறிந்து, சுதாரித்துக்கொண்ட அவர், ஸாரி எனக் கூறி சமாளித்தார்.