'தாவூத் இப்ராஹிமை நெருங்கும் காவல்துறை' - லண்டனில் முக்கிய கூட்டாளி கைது

ஜபிர் மோதி

1993-ம் ஆண்டில் மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளி லண்டனில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள தாவூத் இப்ராஹிம் பல காலமாக தலைமறைவாகவே இருந்து வருகிறார். அவர் எங்கே இருக்கிறார் என்ற தகவல் பல வருடங்களாக மர்மமாகவே இருந்து வருகிறது.

தாவூத் இப்ராஹிம்

இந்நிலையில், அவரின் மிக நெருங்கிய கூட்டாளி எனக் கருதப்படும் ஜபிர் மோதி லண்டனில் உள்ள ஹில்டன் என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் கடந்த வெள்ளிக்கிழமையன்று கைது செய்யப்பட்டிருக்கிறார். பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஜபிர் மோதி தாவூத் இப்ராகிம் மற்றும் அவரின் மனைவிக்கு நெருக்கமானவராக இருந்து உதவிகள் செய்தது மட்டுமின்றி  நிதி மேலாளராகவும் செயல்பட்டு வந்திருக்கிறார்.

ஜபிர் மோதி

கராச்சி மற்றும் துபாயில் இருக்கும் தாவூதின் குடும்பத்தினருக்கும் ஜபிர் மோதிக்கும் இடையே நடைபெற்று வந்த வர்த்தக பரிமாற்றங்களைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வந்த லண்டன் காவல்துறையினர் இவரைக் கைது செய்திருக்கிறார்கள். ஜபிர் மோதி தாவூத் இப்ராஹிமிற்கு வலது கையாக செயல்பட்டு வந்தார் என்றும் அவரைப் பற்றிய பல திரைமறைவு ரகசியங்கள் இவருக்கும் தெரியும் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது. எனவே, இவர் கைது செய்யப்பட்டது மிக முக்கியமான திருப்பு முனையாகக்  கருதப்படுகிறது. காவல்துறையினர் தொடர்ந்து  விசாரிக்கும்போது தாவூத் இப்ராஹிமின்  இருப்பிடம் தொடர்பான தகவல்கள் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!