அடுத்தடுத்து தாக்கும் நிலநடுக்கம் - பீதியில் இந்தோனேசியா மக்கள்

இந்தோனேசியாவின் லாம்போக் தீவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். 

இந்தோனேஷியா

இந்தோனேசியாவின் லாம்போக் தீவில் உள்ள ரின்ஞனி மலைப்பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆகப் பதிவாகியுள்ளது. இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் மக்கள் என்னசெய்வதென்று தெரியாமல் சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் கட்டடங்கள் சரிந்ததில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. தற்போது அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. லாம்போக் தீவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மாதம் தொடக்கத்தில் அதே லாம்போக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல கட்டடங்கள் சரிந்து விழுந்தன. இதில் சுமார் 430 பேர் உயிரிழந்தனர். இந்தப் பேரிடரில் இருந்து தற்போதுதான் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய நிலநடுக்கம் பெரிய பாதிப்புகள் எதையும் ஏற்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!