வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (20/08/2018)

கடைசி தொடர்பு:13:40 (20/08/2018)

சைக்கிளில் பிரசவத்துக்குச் சென்று அசத்திய பெண் அமைச்சர்..!

நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண் அமைச்சர் ஒருவர், அவருடைய பிரசவத்துக்கு தனியாக மிதிவண்டியில் சென்றுள்ளார். இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

நியூசிலாந்து நாட்டில் பெண்கள் துறை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்துவருகிறார் ஜூலி அன்னே ஜென்டெர். அவர், தற்போது 42 வார கர்ப்பிணியாக இருந்துவருகிறார். அவுக்லேண்ட் பகுதியில் வசித்துவரும் அவர், நேற்று பிரசவத்துக்காக மருத்துவமனைக்குச் செல்வதற்கு மிதிவண்டியில் சென்றுள்ளார். 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு மிதிவண்டியில் சென்று மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். அவருடைய இந்தச் செயலுக்கு, அவருடைய சகாக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஜென்டெர், சைக்கிள் ஓட்டுவதன் மீது தீவிரக் காதல் கொண்டவர்.