‘ராணுவச் செயலரின் வீடும் 2 பணியாளர்களும் போதும்’ - பிரதமர் இல்லத்தில் வசிக்க மறுத்த இம்ரான் கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவருக்கு அளிக்கப்பட்ட பிரதமர் இல்லத்தில் தங்க மறுத்து ராணுவச் செயலரின் வீட்டிலேயே, தங்கிக்கொள்வதாக தெரிவித்துள்ளார். 

இம்ரான் கான்

பாகிஸ்தானின் 22-வது பிரதமராக இம்ரான் கான் கடந்த 18-ம் தேதி பதவியேற்றார். இவர் பதவியேற்ற பிறகு நேற்று தொலைக்காட்சி வாயிலாக முதல்முறையாக பாகிஸ்தான் மக்களிடம் பேசினார். அப்போது பாகிஸ்தானில் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். மேலும், இதற்கு முன்னதாக ஆட்சியில் இருந்த அரசு அதிக ஊழல் செய்துள்ளதாகவும் அவர்களை விட்டுவைக்கப் போவதில்லை எனவும் குற்றம் சாடினார். 

இதையடுத்து, தனக்கு வழங்கப்பட்டுள்ள பிரதமர் இல்லத்தில் தான் தங்கப்போவதில்லை எனவும் கூறினார். இது பற்றிப் பேசிய அவர், ``நான் தற்போது இருக்கும் வீட்டில் வசிக்கவே விரும்புகிறேன். ஆனால், பாதுகாப்புக் காரணங்களுக்காக அதிகாரிகள் அதை மறுத்துள்ளனர். பிரதமர் இல்லத்தில் 524 பணியாளர்கள் 80 கார்கள் மற்றும் 33 குண்டு துளைக்காத கார்கள் உள்ளன. இவை அனைத்தும் வீண் செலவு, எனக்கு இவை தேவையில்லை. பிரதமர் இல்லத்தில் நான் வசிக்கப்போவதில்லை அதற்கு மாறாக ராணுவ குடியிருப்பில் உள்ள ராணுவச் செயலரின் 3 படுக்கை அறைகள் கொண்ட வீட்டில் வசிக்க இருக்கிறேன். அங்கு எனக்கு 2 பணியாளர்கள் மட்டுமே போதும்” எனத் தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!