`தடுப்புக் கம்பி கிடையாது... ஆனால், கம்யூட்டர் உண்டு!’ - ஆஸ்திரேலியாவின் டெக்னாலஜி சிறைச்சாலை

சிறைச்சாலை


சிறைச்சாலை என்பது குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கான இடம் மட்டும் இல்ல. மேலும் குற்றங்கள் நடக்காமல் தடுப்பதற்கான பொறுப்பும் அதற்கு உள்ளது. குற்றவாளி தன் தவறுகளை உணர்ந்து அதை திருத்திக்கொள்வதற்கான வாய்ப்பையும் சிறைச்சாலைகள் வழங்க வேண்டும். இதன் காரணமாகவே அனைத்துச் சிறைகளிலும் கைதிகளுக்கான வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன இந்த வரிசையில் ஆஸ்திரேலியா சிறைகள் சற்றே முன்னேறி ஒரு வீடு போன்ற சூழ்நிலையை உருவாக்கத் தயாராகி வருகிறது. தடுப்புக் கம்பிகள் இல்லாத, கணினி வசதி உடைய, 1,700 குற்றவாளிகளுக்கான பிரத்யேக சிறைச்சாலை ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கட்டமைக்கப்பட்டு வருகின்றது.

சிறைச்சாலை


மேலும், சிறைவாசிகளுக்கான கணினி, வரைப்பலகை எனப் பல கருவிகளும் இருக்கும். இதன் மூலம் தங்கள் குடும்பத்தினருடன் தொடர்புகொண்டு பேசலாம் மற்றும் வியாபாரம் தொடர்பான அனைத்துச் செயல்பாடுகளையும் செய்துகொள்ளலாம். அது மட்டுமின்றி கல்வி கற்கவும் வசதிகள் உள்ளன. இந்தச் சிறைகள் மற்ற சிறைகளிலிருந்து மாறுபட்ட அனுபவத்தை வழங்கும்.

இங்கு சிறைச்சாலைகளின் முக்கிய நோக்கமும் கடைப்பிடிக்கப்படும், அவர்களின் நன்னடத்தையானது கண்காணிக்கப்பட்டு அதை சீர்படுத்தும். கைதிகளின் அதிகபட்சத் தேவைகள் நிறைவேற்றப்படும். இங்கு சில பயிற்சிகளும் வழங்கப்படும். தோட்டக்கலைப் பயிற்சி, மர வேலை, உலோக வேலை ஆகியவை வழங்கப்படும். இதைப் பற்றி இத்திட்ட அலுவலர் மைக்கேல் கிராம்ப் கூறுகையில், ``இந்தப் பயிற்சி விடுதலைக்குப் பின்னர் கைதிகள் இயல்பாகச் சமுதாயத்தில் வாழ்க்கை நடத்துவதற்கு உதவும்” என்றார்.

இங்கு 1,000 ஆண் கைதிகளுக்கும் 300 பெண் கைதிகளுக்கும் மையப்பகுதியில் சிறைகள் உள்ளன. அதை அடுத்துள்ள பகுதி 400 ஆண் குற்றவாளிகளுக்கானது. மறுவாழ்வு திட்ட அமைச்சர் டேவிட் எலியட் அவர்களின் மேற்பார்வையில் 700 மில்லியன் டாலர் மதிப்பிலான 3,500 க்யூபிக் மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டு வருகின்றது.

இதன் பணிகளுக்காக 400 தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன் பணி பெருமளவு முடிந்த நிலையில், இந்த டெக்னாலஜி சிறைச்சாலை 2020-க்குள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!