``இங்க ரூல்ஸ் வேற பாஸ்" - விண்வெளியில் நடைபெற்ற முதல் டென்னிஸ் போட்டி

டென்னிஸ்

இதுவரை இல்லாத வகையில் பூமிக்கு வெளியே டென்னிஸ் விளையாடி சாதனை படைத்திருக்கிறார்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள். பூமியில் இருந்து 408 கிலோமீட்டர் தூரத்தில் சுற்றிக் கொண்டிருக்கும்
அந்த இடத்தில் முற்றிலுமாக புவியீர்ப்பு விசை இருக்காது. எனவே, அதற்கேற்றவாறு போட்டியின் விதிகள் மாற்றம் செய்யப்பட்டிருந்தன. இலகுவான ஃபோம்  (foam) பந்து இதில் பயன்படுத்தப்பட்டது. அணிகளுக்குக் குறுக்கே வலை ஒன்றும்  மிதக்க விடப்பட்டிருந்தது.

போட்டி

இரட்டையர் போட்டியாக இது நடைபெற்றது. விண்வெளி வீரர்கள் இந்த ஸ்பெஷலான போட்டியில் விளையாடுவதற்காக சில மாதங்கள் பயிற்சி செய்திருக்கிறார்கள். இந்தப் போட்டி 3D முறையில் பூமியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. வழக்கமான திரையில் இல்லாமல் பில்லி ஜீன் கிங் டென்னிஸ் ஸ்டேடியத்துக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த 350 டன் எடையும் 120 அடி சுற்றளவையும் கொண்டிருந்த கோள வடிவ உலோக உருண்டையில் இந்தப் போட்டி ஒளிபரப்பப்பட்டது. இந்தப் போட்டி இளம் வீரர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நடத்தப்பட்டதாக அமெரிக்க டென்னிஸ் சங்கம் அறிவித்திருக்கிறது.   

 

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!