ஏழு ஆண்டுகள் போராட்டம்... 1.2 மில்லியன் டாலர் இழப்பீடு பெறும் இந்திய வம்சாவளி தொழிலதிபர்

இணையதளத்தில் தவறான செய்தி வெளியிட்டு புகழுக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காகக் கனடாவைச் சேர்ந்த இந்தியா வம்சாவளி தொழிலதிபருக்கு 1.2 மில்லியன் டாலர்  நஷ்ட ஈடாக வழங்கப்படவுள்ளது. 

கனடாவைச் சேர்ந்த இந்தியா வம்சாவளி தொழிலதிபர் அல்தாப் நஷ்ரேலி. அவர், 2011-ம் ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியா உச்ச நீதிமன்றதில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், `ஆன்லைன் விற்பனையாளர் பேட்ரிக் பைரைன், என்னுடைய புகழுக்கு களங்கம் ஏற்படும் வகையில் தொடர்ச்சியாகச் செயல்பட்டுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த டீப்கேப்சர் (deepcature) இணையதளத்தில் நான், போதைப்பொருள் கடத்துபவர், ஆயுதங்கள் கடத்துபவர் போன்று தொடர்ச்சியாகச் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தச் செய்தி மார்க் மிட்சேல் என்பவரால் எழுதப்பட்டுள்ளது. அந்த வெப்சைட்டுக்கு பைரேன்தான் உரிமையாளர்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கில், அல்பாப் நஷ்ரேலிக்கு 1.2 மில்லியன் டாலர் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று பிரிட்டிஷ் கொலம்பியா உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்புக்கு எதிராகக் கனடா உச்ச நீதிமன்றத்தில் வெப்சைட் உரிமையாளர் பைரேன் வழக்கு தொடர்ந்தார். கடந்த வாரம் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், பைரேன் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து, கொலம்பியா நீதிமன்றத் தீர்ப்பை கனடா உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!