அமெரிக்காவில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு! - 4பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில், மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 4 பேர் கொல்லப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள ஜாக்சன்வில்லே என்ற இடத்தில் வீடியோ கேம் விளையாட்டுப்  போட்டிகள் நேற்று  நடைப்பெற்றன. அப்போது, மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியை எடுத்து கண்மூடித்தனமாக சுடத்தொடங்கினார்.  இந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் படுகாயமடைந்துள்ளனர். முதற்கட்ட விசாரணையின்படி  4 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கிச் சூடு நடைபெற்ற ஜேக்னோ பகுதி வழியாகப் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என காவல்துறையினர் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட  நபர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர், அந்த விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்ட போட்டியாளர் எனவும், தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. பார்வையாளர்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியபின், அந்த நபர் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு, தற்கொலை செய்துகொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, இரண்டு நாள்களுக்கு முன் இதே பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் நடந்த கால்பந்து விளையாட்டின்போது துப்பாக்கிச் சூடு நடந்தது. அதில் ஒருவர் உயிரிழந்தார். இருவர் காயமடைந்தனர். இந்நிலையில், தற்போது மீண்டும் நடந்துள்ள இந்தக் கூட்டு துப்பாக்கிச் சூடு சம்பவம், அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!