`730 நாள்கள் விடுமுறை வேண்டும்' - ரயில்வே அமைச்சரை அதிரவைத்த அந்த நபர்! | Pakistan railway officer applies for 730 days of leave

வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (28/08/2018)

கடைசி தொடர்பு:15:24 (28/08/2018)

`730 நாள்கள் விடுமுறை வேண்டும்' - ரயில்வே அமைச்சரை அதிரவைத்த அந்த நபர்!

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ரயில்வே மந்திரி மீதுள்ள கடும் அதிருப்தியின் காரணமாக, ரயில்வே அமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவர், 730 நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை கேட்டுள்ள சம்பவம், பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான்

பாகிஸ்தானில், இம்ரான் கான் தலைமையிலான புதிய அரசு சமீபத்தில் பதவியேற்றது. அதில், ரயில்வே துறை அமைச்சராக ஷாகித் ரஷித் அஹ்மத் என்பவர் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிலையில், ரயில்வே துறையில் தலைமை வர்த்தக மேலாளராகப் பணியாற்றிவந்த முகமது ஹனீப் குல் என்பவர், தனக்கு 730 நாள்கள் சம்பளத்துடன்கூடிய விடுமுறை வேண்டும் என உயரதிகாரியிடம் விண்ணப்பம் கொடுத்துள்ளார். ``புதிய ரயில்வே துறை அமைச்சருக்கு இந்தத் துறை பற்றிய விவரங்கள் எதுவும் தெரியவில்லை. மேலும், மரியாதை கொடுக்கவும் தெரியவில்லை. இதனால், அவருக்குக் கீழே என்னால் வேலைபார்க்க முடியாது. எனக்கு 730 நாள்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும்" என விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளார்.

விடுமுறை

ரயில்வே துறை அமைச்சருக்கு எதிராக ரயில்வே துறை உயரதிகாரி முகமது ஹனீப் குல்லின் இந்த நடவடிக்கை, பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களிலும் இந்தச் செய்தி வேகமாகப் பரவிவருகிறது. எனினும், அவரின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதா  இல்லையா... என்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.