வெளியிடப்பட்ட நேரம்: 17:31 (30/08/2018)

கடைசி தொடர்பு:17:47 (30/08/2018)

`சரிசமமற்ற உலகம் இது!’ - ஆப்பிரிக்க புகைப்படக் கலைஞரின் கழுகுப் பார்வையில் தாராவி!

உலகம் முழுவதும் நிலவும் ஏழை, பணக்காரர் இடைவெளியை ட்ரோன் புகைப்படத்தின் வாயிலாக அற்புதமாகப் பிரதிபலித்திருக்கிறார் புகைப்பட கலைஞர் ஜானி மில்லர்.

ட்ரோன் புகைப்படம்
 

உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் ஏழைப் பணக்காரர் என்ற இரு பிரிவுகள் கண்டிப்பாக இருக்கும். இந்த இரு பிரிவினருக்கும் இடையே இருக்கும் ஏற்றத் தாழ்வை நகரங்களின் நிலப்பரப்பில் பார்க்க முடியும். நகருக்கு மத்தியில் பிரமாண்டமாக உயர்ந்து நிற்கும் கட்டடங்கள். நகரின் ஒதுக்குப்புறங்களில் கால்வாய் வசதிகூட இல்லாமல் நெருக்கடியில் குடிசைகள்... உலகெங்கிலும் உள்ள நகரங்களில் காணப்படும் இந்த அப்பட்டமான சமூக வேறுபாட்டைப் புகைப்படமாக எடுத்து விளக்கியுள்ளார் ஜானி மில்லர். 

தாராவி
 

தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் ஜானி மில்லர். புகைப்பட கலைஞரான இவர் `Unequal Scenes’ என்னும் இணையதளத்தின் மூலம் உலக நாடுகளில் நிலவும் ஏழை,பணக்காரர் இடைவெளியைப் புகைப்படமாக எடுத்துப் பதிவு செய்து வருகிறார். இந்தப் புகைப்படங்கள், பல அடி உயரத்திலிருந்து ட்ரோன் விமானங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டவை.

 

 

 


ஜானி மில்லரின் கழுகுப் பார்வையிலிருந்து மும்பை நகரும் தப்பவில்லை. ‘இதுதான் இந்தியாவின் பொருளாதார தலைநகரமான மும்பை. இந்தப் புகைப்படத்தில் இருப்பது மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியும், அதற்குச் சற்று தொலைவில் அமைந்திருக்கும் தேசிய பங்குச் சந்தையின் கட்டடமும்தான்’ என்று அந்தப் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். 

நாட்டில் குறைந்த சதவிகிதத்தில் உள்ள பணக்காரர்கள் நகரில் சகல வசதிகளுடன் வசிக்கின்றனர். அதிக சதவிகிதத்தில் இருக்கும் ஏழை எளிய மக்கள் அடிப்படை வசதிகளின்றி நெருக்கடியில் வசிக்கின்றனர். இந்த ட்ரோன் காட்சிகள் மாற வேண்டும் என்பதே ஜானி மில்லரின் கனவாம்! 
 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க