வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (31/08/2018)

கடைசி தொடர்பு:15:15 (31/08/2018)

பத்துமலை முருகன் கோயில் படிக்கட்டுகளுக்கு புதிய வர்ணம் பூசியதால் மலேசிய அரசு அதிருப்தி!

லகப் புகழ்பெற்ற மலேசியா பத்துமலை முருகன் கோயில் படிக்கட்டுகளுக்கு புதிய வர்ணம் பூசப்பட்டதால் பழைமையை பாரம்பர்யத்தை இழந்து விட்டதாக மலேசிய அரசு குற்றம் சாட்டியுள்ளது. 

பததுமலை முருகன் கோவில்

கோலாலம்பூர் அருகே புகழ்பெற்ற பத்துமலை முருகன் கோயில் அமைந்துள்ளது. குகைக் கோயிலான இங்கு 272 படிக்கட்டுகள் ஏறிய பிறகே முருகனை தரிசிக்க முடியும். பத்துமலை கோயிலில்தான் உலகிலேயே உயரமான 140 அடி முருகன் சிலை உள்ளது. மலேசியா வாழ் தமிழர்களின் மனம் கவர்ந்த கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் நிர்வாகம் படிகளுக்கு பளீரென்ற கலீடாஸ்கோப் வர்ணம் பூசியது. படிக்கட்டுகளுக்கு வர்ணம் பூசுவது குறித்து மலேசியா கலாசாரத்துறை அமைச்சகத்திடம் கோயில் நிர்வாகம் முன்  அனுமதி வாங்கவில்லை என்று சொல்லப்படுகிறது. 

இதையடுத்து மலேசிய கலாசாரத்துறை அமைச்சகம் பத்துமலை முருகன் கோயில் நிர்வாகத்துக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது, அதில், `` கோயில் நிர்வாகத்தின் செயல்பாடு எங்களை மிகுந்த வருத்தத்துக்குள்ளாக்கியுள்ளது. புதிய வர்ணம் பூசியதால் கோயில் இயற்கைத் தன்மையை இழந்துள்ளது. ஒற்றுமை, ஒருமைப்பாடு கொண்ட இந்த நாட்டில் தன்னிச்சையாக கோயில் நிர்வாகம் முடிவெடுத்தது சரியானது அல்ல. பாரம்பர்யமான கோயில்கள், மசூதிகள், ஆலயங்கள் முக்கியமான பராமரிப்பு பணிகள் மேற்கொண்டால் கண்டிப்பாக முறையான அனுமதி வெற வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த குகைக் கோயிலில் தைப்பூசத் திருவிழா உலகப் புகழ்பெற்றது. தமிழர்கள் மட்டுமல்லாமல் மலேசியாவில் வசிக்கும் லட்சக்கணக்கான இந்திய மக்கள் பத்துமலை தைப்பூசத் திருவிழாவில் பங்கேற்பார்கள். மலேசியாவில் 3 கோடி இஸ்லாமிய மக்கள் வசிக்கிறார்கள். 70 லட்சம் சீனர்களும் 20 லட்சம் இந்தியர்களும் வசிக்கின்றனர். இஸ்லாமிய நாடாக மலேசியா அறியப்பட்டாலும் அனைத்து மத மக்களுக்கும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களுக்கும் உரிய மரியாதை அளிக்கப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க