மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பிலிப்பைன்ஸ் அதிபர்!

பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டூர்ட்டே, பாலியல் வன்கொடுமைகள்குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிலிப்பைன்ஸ்  அதிபர் ரோட்ரிகோ டூர்ட்டே

பிலிப்பைன்ஸ் அதிபராக, கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து பொறுப்பு வகிக்கும் ரோட்ரிகோ டுடெர்டே (Rodrigo Duterte), பொது நிகழ்ச்சிகளில் நகைச்சுவையாகப் பேசி, அவ்வப்போது சர்ச்சையில் சிக்கிவிடுவார். முன்னதாக, இலொயினா-வில் உள்ள ராணுவ முகாமில், கடந்த பிப்ரவரி மாதம் கலந்துகொண்டு பேசிய அதிபர், `நான் வாங்கும் சம்பளம் என் குடும்பத்துக்குப் போதுமானதாக இல்லை. உணவுக்கான அலவன்ஸ் பணமும் தருவதில்லை. இரண்டு மனைவிகள் இருப்பதால், குடும்பச் செலவுகளைச் சமாளிக்க முடியவில்லை' எனப் பேசி சர்ச்சையில் சிக்கினார். 

தற்போது, மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் டூர்ட்டே. கடந்த 30-ம் தேதியன்று, பொதுநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அதிபரிடம், `தங்களது சொந்த ஊரான தவோவில் (Davao) பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதாக  சமீபத்தில் வெளியான போலீஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது' என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அதிபர், `அழகான பெண்கள் இருக்கும்வரை, அவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரிக்கத்தான் செய்யும்' என்று பதிலளித்தார். அதோடு விடாமல், இது தொடர்பாக நகைச்சுவை உரையாடலையும் தொடர்ந்திருக்கிறார். அதிபரின் பதில் மற்றும் உரையாடல், தற்போது சர்வதேச அளவில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பெண்கள் அமைப்பினரும் தங்கள் கண்டனங்களைப் பதிவுசெய்துவருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!