பாகிஸ்தான் உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி - வரலாறு படைத்த தஹிரா சஃப்தார்!

பாகிஸ்தான் உயர்நீதிமன்றத்துக்கு முதல்முறையாக தஹிரா சஃப்தார் என்ற பெண் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

நீதிபதி 

பாகிஸ்தான் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தஹிரா சஃப்தார் என்பவர் சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டிருந்தார். பாலூசிஸ்தான் மாகாண ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில்  இவர் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றார். பாகிஸ்தான் உயர்நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக ஒரு பெண், தலைமை நீதிபதி பதவியேற்றிருப்பது இதுவே முதல்முறையாகும். இவரின் பதவியேற்பு விழாவில் மூத்த நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பலர் கலந்துகொண்டனர். 

பாலூசிஸ்தானின் முதல் பெண் சிவில் நீதிபதியாகப் 1982-ம் ஆண்டு தஹிரா பொறுப்பேற்று வரலாறு படைத்தார் இதனைத் தொடர்ந்து முதல் பெண் தலைமை நீதிபதி என்ற பெருமையையும் தற்போது பெற்றுள்ளார். பாலூசிஸ்தான் உயர்நீதிமன்றத்தில் 18-வது தலைமை நீதிபதியாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் நீதிபதி முகமது நூர் முஷ்கனிஸாய்க்கு பிறகு தஹிர் சஃப்தார் தான் மூத்த நீதிபதியாகப் பொறுபேற்றுள்ளார்.

தேசத் துரோக குற்றம் சாட்டப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளில் தஹிராவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!