சோமாலியா கார் குண்டுவெடிப்பில் 6 பேர் பலி

சோமாலியாவில் தற்கொலைப்படையினர் நிகழ்த்திய கார் குண்டுவெடிப்பில் 6 பேர் பலியாகினர்.

சோமாலியா

Photo Credit: ANI

சோமாலியா தலைநகர் மொகாதிசுவில் (MOhadishu) அரசு கட்டங்கள் மீது வெடிகுண்டு நிரப்பிய காரை மோதச் செய்து தாக்குதல் நடத்தியுள்ளனர். அரசுக் கட்டங்கள், பள்ளி மற்றும் மசூதி அமைந்துள்ள பகுதியில் இந்தக் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட 6 பேர் பலியாகியுள்ளனர். காயமடைந்த 15 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பள்ளிக் குழந்தைகளும் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலினால் அரசு கட்டடங்கள், பள்ளிக்கூடம் மற்றும் அருகில் இருந்த மசூதி சேதமடைந்துள்ளன. இந்தத்தாக்குதலுக்கு அல்- சாபப் (AL0-Shabab) பயங்கரவாத இயக்கத்தினர் பொறுப்பேற்றுள்ளனர். பயங்கரவாதிகளின் வாகனத்தை தடுக்கச் சென்ற 3 பாதுகாப்பு படை வீரர்கள் இத்தாக்குதலில் உயிரிழந்தனர்.

இதில் காயமடைந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், காலையில் மாணவர்களுக்குப் பாடம் எடுத்துக்கொண்டிருந்தபோது பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. கார் குண்டு வெடிப்பால் இந்தப் பகுதியே சேதமடைந்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!