`ஜாலியாக டெஸ்ட் போட்டியைப் பார்த்த மல்லையா' - வறுத்தெடுத்த வலைதளவாசிகள்!

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5வது டெஸ்ட் போட்டியை காண ஓவல் மைதானம் விஜய் மல்லையா சென்றுள்ளார்.

விஜய் மல்லையா

13 பொதுத்துறை வங்கிகளிலிருந்து 9,000 கோடி ரூபாய்க் கடனாகப் பெற்று திருப்பிச் செலுத்தாமல் தலைமறைவாகினார் விஜய் மல்லையா. இவரின் செயல் சர்ச்சையை ஏற்படுத்த இது தொடர்பாக வழக்குப் பதிந்து சிபிஐ விசாரித்து வருகிறது. லண்டனில் உள்ள அவரை இந்தியா கொண்டுவர போலீஸ் முனைப்பு காட்டி லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் முறையிட்டு உள்ளது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுவரும் நிலையில் அவர் விரைவில் இந்தியா கொண்டுவரப்படுவார் எனத் தெரிகிறது. இது ஒருபுறம் இருக்க, அமலாக்கத்துறையினர் மல்லையாவின் சொத்துக்களை முடங்கியுள்ளது. கிங் பிஷர் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட அவரின் பல்வேறு சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. கைது, வழக்கு, சொத்துகள் முடக்கம் என இப்படி நாலாபுறமும் நெருக்கடியில் சிக்கித்தவித்து வந்தாலும், அதைப் பற்றி கவலைப்படாமல் ஹாயாக ஊர் சுற்றி வருகிறார் மல்லையா.

லண்டனில் தங்கியுள்ள அவர், டென்னிஸ், குதிரைப் பந்தயம், பார்முலா ரேஸ் பார்க்கச் செல்வது என எப்போதுமே தன்னை பிஸியாகவே வைத்துக்கொள்கிறார். அப்படிச் செல்லும் போது ஊடகங்களின் கண்ணில் மாட்டி சமூகவலைத்தளங்களில் வறுபடுவதிலும் இருந்து தப்புவதில்லை. அப்படி ஒரு சம்பவம் தான் மீண்டும் நிகழ்ந்துள்ளது. இந்தியா - இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நேற்று ஓவலில் தொடங்கியது. இந்தப் போட்டியை காண்பதற்காக மல்லையா ஓவல் மைதானம் வந்துள்ளார். இவரைப் பார்த்த அங்கிருந்த இந்தியர்கள் அதனைப் புகைப்படம், வீடியோவாக எடுத்து பரவவிட்டுள்ளனர். இதனைப் பார்த்த பலரும் லண்டனில் மல்லையா ஜாலியாக சுற்றிவருவது குறித்து கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!