நீரவ் மோடி தங்கைக்கும் `செக்’ வைத்த இண்டர்போல்!

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவர் நீரவ் மோடி. தற்போது அவரது தங்கை, பூர்வி தீபக்கிற்கு ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்திருக்கிறது இண்டர்போல்.

நிரவ் மோடி

மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் பெற்று, அதைத் திருப்பிச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டதாக நீரவ் மோடி மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து, அவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் சிபிஐ, அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது. விசாரணை நடந்துகொண்டிருக்கும்போதே, நீரவ் மோடியும் அவரது குடும்பத்தினரும் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்றதாகத் தெரியவந்தது. இதையடுத்து, கடந்த ஜூலை மாதம், இண்டர்போல் அமைப்பு நீரவ் மோடிக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் ஒன்றை வெளியிட்டது.

 

ரெட் கார்னர் நோட்டீஸ்

தற்போது, நீரவ் மோடியின் தங்கை 'பூர்வி தீபக்'கிற்கு, பணமோசடியில் ஈடுபட்டதற்காக, அதே ரெட் கார்னர் நோட்டீஸை பிறப்பித்துள்ளது இண்டர்போல். இந்திய நீதித்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டதன் பேரில், இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது இண்டர்போல் அமைப்பு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!