சக பெண் பணியாளருடன் உணவு அருந்திய இளைஞர்! - சிறையில் அடைத்த சவுதி அரசு  | Saudi authorities have arrested an Egyptian hotel worker

வெளியிடப்பட்ட நேரம்: 09:20 (11/09/2018)

கடைசி தொடர்பு:09:25 (11/09/2018)

சக பெண் பணியாளருடன் உணவு அருந்திய இளைஞர்! - சிறையில் அடைத்த சவுதி அரசு 

சவுதி அரேபியாவில் உள்ள எகிப்திய ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்த சக பெண் பணியாளர் ஒருவருடன் உணவைப் பகிர்ந்து கொண்டு சாப்பிட்ட எகிப்த் நாட்டவரை போலீஸார் கைது செய்துள்ளனர். சாப்பிடும்போது அவர்கள் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சவுதி

சவுதி அரேபியாவில் பெண்களுக்கு கடுமையான சட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அங்கு செயல்படும் எகிப்திய ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்த எகிப்த் நாட்டைச் சேர்ந்த ஒருவர், அதே ஹோட்டலில் பணிபுரியும் சக பெண் பணியாளர் ஒருவருடன் உணவு அருந்தி உள்ளார். அப்போது, இருவரும் சாப்பிடும் வீடியோவை அவர்கள் எடுத்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது. வெளியான சில நிமிடங்களிலேயே அதிகமாகப் பகிரப்பட்டது. 

30 நிமிடங்கள் கொண்ட வீடியோவில் புர்கா அணிந்த பெண் ஒருவருடன் அந்த நபர் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதுபோல் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இதையடுத்து, உணவகத்துக்கு விரைந்த போலீஸார் வீடியோவில் இருந்த எகிப்த் நாட்டவரைக் கைது செய்தனர். அதோடு, பெண்களைப் பணியமர்த்தும் விதிகளைக் கடைப்பிடிக்காமல் மீறியதாக ஹோட்டல் உரிமையாளருக்குச் சம்மன் அனுப்பியுள்ளது தொழிலாளர் அமைச்சகம்.