'மோடி எனக்கு நல்ல நண்பர். அவரை நான் மிகவும் விரும்புகிறேன்' - டொனால்டு டிரம்ப்

இந்திய பிரதமர், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடம் பல விஷயங்களை விவாதித்துள்ளார். அந்த விவரங்களை உயர்மட்டக் கூட்டத்தில் விவரத்தை வெளியிட்டுயுள்ளார் டொனால்ட் டிரம்ப்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி எனக்கு நல்ல நண்பர். அவரை நான் மிகவும் விரும்புகிறேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளதாக புகழ்பெற்ற பத்திரிகையாளர் பாப் உட்வர்ட் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

டொனால்டு டிரம்ப்

'வெள்ளை மாளிகையில் டொனால்டு டிரம்ப்' என்ற புத்தகத்தை எழுதியுள்ள புகழ்பெற்ற பத்திரிகையாளர் பாப் உட்வர்ட், "இந்திய பிரதமர் நரேந்திர மோடி எனக்கு நல்ல நண்பர். அவரை நான் மிகவும் விரும்புகிறேன்" என்று அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் கூறியுள்ளதாக தனது புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளார். 

மேலும், இவரது புத்தகத்தில், பிரதமர் மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தபோது வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபரைச் சந்தித்த போது என்ன பேசினார் என்பது குறித்த விவரத்தையும் வெளியிட்டுள்ளார்.  

இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 26-ம் தேதி அமெரிக்க அதிபரை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு நடந்து மூன்று வாரங்களுக்குப் பின்பு, வெள்ளை மாளிகையில் நடந்த உயர்மட்டக் கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமர் என்னிடம் விவாதித்த விஷயங்கள் என்று வெளிப்படையாக சில விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார். அதில், `ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா எதையும் எடுத்துச் செல்ல முடியவில்லை. ஆனால், ஆப்கானிஸ்தானில் ஏகப்பட்ட வளங்கள் இருக்கின்றன. அங்குள்ள வளங்களை எடுத்துக்கொண்டு அவர்களுக்கு உதவி செய்யலாம். அமெரிக்காவுக்கு ஒத்துழைக்காத பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவி செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும்' என இந்திய பிரதமர் பேசியதாக குறிப்பிட்டுள்ளார் டிரம்ப் .

மேலும், `அமெரிக்காவுடன் பாகிஸ்தான் நல்ல நட்புடன் இருப்பது கிடையாது. தீவிரவாதிகளை ஒழிப்பதில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவதும் இல்லை. ஆனால், அவர்களுக்கு ஆண்டுக்கு 1.3 பில்லியன் டாலர் தொகையை உதவியாக வழங்கி வருகிறோம். இதனை உடனடியாக நிறுத்த வேண்டும்' என்று வருத்தத்துடன் டிரம்ப் தெரிவித்துள்ளதாக எழுதியுள்ளார் பாப் உட்வர்ட்.

டொனால்டு டிரம்ப்

பாப் உட்வர்ட் தனது புத்தகத்தில், 'டிரம்ப் நிர்வாகம் செயலற்று உள்ளது. டிரம்ப், குழப்பமாகவும், சில சமயங்களில் மென்மையாகவும், பல சமயங்களில் புரிந்துகொள்ள முடியாத வகையிலும் செயல்படுகிறார்' என்று குறிப்பிட்டுள்ளார். அதிபர் டொனால்ட் டிரம்ப்-யின் நிர்வாகத்திறன் குறித்து கேள்வி கேட்கும் வகையில் இருப்பதால் இந்த புத்தகம் சர்ச்சையைக் கிளம்பியுள்ளது. இந்த புத்தகம் குறித்து கருத்து தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை, `புத்தகத்தின் விவரங்கள் பொறுப்பற்றதனமாக உள்ளது' என்று குறிப்பிட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!