அமெரிக்க அதிபர் டிரம்ப் பாதுகாப்புக் குழுவில் இடம் பெற்று சாதித்த இந்தியர்!

லகிலேயே உச்சகட்டப் பாதுகாப்பு அளிக்கப்படும் நபர் அமெரிக்க அதிபர் ஆவார். அமெரிக்க அதிபர் டிரம்ப் -க்குப் பாதுகாப்பு அளிக்கும் படையான United States Secret Service  குழுவில் இந்தியர் ஒருவர் இணைந்துள்ளார். 

டொனால்ட் டிரம்ப்புக்கு இந்திய பாதுகாவலர்

பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த அஷ்தீப்சிங் பாட்டியா ( வயது 28 ) இந்தப் பெருமையைப் பெற்ற முதல் சீக்கியர். கொரில்லா பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளை முடித்த அவர் கடந்த வாரம் அமெரிக்க அதிபரின் பாதுகாப்புக் குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டார். 

இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டதையடுத்து 1984 -ம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தில் அஷ்தீப்சிங் பாட்டியாவின் குடும்பமும் பாதிப்புக்குள்ளானது. கலவரத்தில் அஷ்தீப்சிங்கின் மாமா இறந்தார். தந்தையும் படுகாயமடைந்தார். இதனால், கான்பூரில் வசித்து வந்த அஷ்பீந்தர்சிங்கின் குடும்பம் லூதியானாவுக்கு இடம் பெயர்ந்தது. கடந்த 2000- ம் ஆண்டு அஷ்தீப்சிங் பாட்டியாவின் குடும்பம் அமெரிக்காவுக்குக் குடி பெயர்ந்தது. அப்போது அஷ்தீப் சிங்கின் வயது 10.

அமெரிக்க அதிபரை பாதுகாக்கும் United States Secret Service  குழுவில் இணைய வேண்டுமென்பது அஷ்தீப்சிங்கின் கனவு. அதற்கேற்ற வகையில் உழைத்தார். பயிற்சி முடித்த நிலையில், பாதுகாப்புப் பணியில் இருக்கும் போது டர்பன் கட்டக் கூடாது, தாடி வைக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அஷ்தீப்சிங் டர்பனுக்கு அனுமதி பெற்றார். குழுவில் இணைக்கப்படும் நிகழ்ச்சியின் போது டர்பன் அணிந்து தாடியுடன்தான் பங்கேற்றார். தற்போதையை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பைப் பாதுகாக்கும் பணியில் இனி அஷ்தீப்சிங் பாட்டியா ஈடுபடுவார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!