`நாட்டை விட்டு வெளியேறும் முன் நிதியமைச்சரைச் சந்தித்தேன்!’ - விஜய் மல்லையா பேட்டி

இந்தியாவிலிருந்து வெளியேறும் முன்னர் நிதியமைச்சரைச் சந்தித்ததாக லண்டனில் தஞ்சமடைந்துள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்திருக்கிறார்.

விஜய் மல்லையா

இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா பொதுத் துறை வங்கியில் 9,000 கோடி ரூபாய் அளவுக்குக் கடன் வாங்கிவிட்டு அதைத் திரும்ப செலுத்த முடியாமல் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிவிட்டார். இங்கிலாந்தில் தஞ்சமடைந்திருக்கும் அவரை இந்தியா கொண்டு வர லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் இந்திய அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கின் விசாரணையில் இன்று விஜய் மல்லையா நேரில் ஆஜராகினார். அப்போது பேசிய விஜய் மல்லையா தரப்பு வழக்கறிஞர், விஜய் மல்லையாவோ கிங் ஃபிஷர் நிறுவனமோ தவறான நோக்கத்துக்காகக் கடன் வாங்கவில்லை. அந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருந்தது. கடன் கொடுத்த ஐ.டி.பி.ஐ வங்கி அதிகாரிகளுக்கு நன்றாகவே தெரியும்” எனக் கூறினார். இவரின் வாதத்துக்குப் பிறகு மும்பை ஆர்தர் ரோடு சிறைவீடியோவை நீதிபதி பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து வழக்கு வரும் 18-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய விஜய் மல்லையா, ``வெளிநாடு செல்லும் முன்னர் நிதியமைச்சரைச் சந்தித்து, எனது கடன்களை அடைப்பதாகக் கூறினேன். இதுவே உண்மை’’ என்று தெரிவித்தார். வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றம் முன்னிலையில் திரண்டிருந்த பத்திரிகையாளர்களை நோக்கி, `என் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்றம் முடிவு செய்யும்’ என்றும் அவர் கூறினார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!