‘சோகம் வேண்டாம்.. மகிழ்ச்சியாக இருங்கள்’ - ஆப்கானிஸ்தான் சார்லி சாப்ளின்!

பயங்கரவாதிகளின் தாக்குதலால் கடும் சேதம் கண்டுள்ள ஆப்கானிஸ்தான் மக்களை மகிழ்வித்துக்கொண்டிருக்கிறார் சார்லி சாப்ளின். 

 கரீம் ஆசீர்

`சார்லி சாப்ளின்'  என்ற  பெயரைச் சொன்னாலே போதும், அனைவரது முகத்திலும் குறும் புன்னகை தோன்றும். நகைச்சுவை உலகின் பிதாமகன் என்று அனைவராலும் அறியப்பட்டவர். காலங்கள் கடந்து இன்றும் நம் எல்லோரின் புன்னகையில் வாழ்பவர்.  அந்த சார்லி சாப்ளினைப் போன்று வேடமிட்டு, தற்போது ஆப்கானிஸ்தான் மக்களை மகிழ்வித்துவருகிறார், கரீம் ஆசீர். மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான பூங்காக்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் சார்லி சாப்ளின் போலவே வேடமிட்டு, வேடிக்கை நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார். அதேபோல, மாணவர்கள் மத்தியிலும் நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார். 

ஆஃப்கானிஸ்தான்  கரீம் ஆசீர்

ஆப்கானிஸ்தான் மக்களை வெகுவாகக் கவர்ந்த கரீம் ஆசீர், `ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதல், வெடி விபத்துகள், ராணுவ முகாம்மீது நடத்தப்பட்ட குண்டு வீச்சு உள்ளிட்ட தாக்குதலுக்கு நான் ஆதாரமாக இருக்கிறேன். உறவினர்கள், நண்பர்கள், உடைமைகள் ஆகியவற்றை இழந்து ஆப்கான் மக்கள் கண்ணீர் சிந்தியதைக் கண்டிருக்கிறேன். அதனால், துன்பத்தில் தவித்துவரும் ஆஃப்கான் மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். அதன்படி, சார்லி சாப்ளின் வேடமிடலாம் என முடிவுசெய்து, சிறப்பாகப் பணியாற்றிவருகிறேன்.

ஆப்கானிஸ்தான்

மதத்துக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுவதாகப் பயங்கரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துவருகிறார்கள். இருப்பினும், பயத்தை ஒதுக்கிவைத்துவிட்டு, ஆப்கான் மக்களை மகிழ்ச்சியாக வைக்கத் தனது பாதையில் சென்றுகொண்டிருக்கிறோம். ஆப்கான் மக்கள் துயரங்களை மறந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இதுவே எனது குறிக்கோள்' என்று கூறுகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!