போர்டு மீட்டிங்குக்கு எளிமையான உடையில் வந்தது ஏன்?! - அமேசான் தலைவர் விளக்கம்

உலகப் பணக்காரர் பட்டியலில், மைக்ரோ சாஃப்ட்  நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸை பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடத்தைப் பிடித்துள்ள அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெஸோஸ், சமீபத்தில் நடந்த போர்டு மீட்டிங்கு எளிமையாக உடையை அணிந்து சென்றுள்ளார். 

அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெஸோஸ்

உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக அமேசான் உருவெடுத்து வருகிறது. இணையதளத்தில் பொருள்களை வாங்க விரும்பும் கோடிக்கணக்கான மக்களின் முதன்மை தேர்வாகவும் அமேசான் உள்ளது. இந்தியாவிலும் முன்னணி நிறுவனமாக உள்ளது. இப்படியான, நிலையில் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தையும் பிடித்துள்ளார் அந்நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெஸோஸ் (Jeff Bezos). தற்போது, விஷயம் என்னவென்றால் நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கில் வியாபாரம் செய்துவரும் ஜெஃப் பெஸோஸ், போர்டு மீட்டிங் ஒன்றில் கலந்து கொண்டபோது எளிமையாக பைஜாமா உடை அணிந்ததுதான். கடந்த புதன்கிழமையன்று நடந்த போர்டு மீட்டிஸ்கில் நீளநிற பைஜாமா உடை அணிந்து வந்திருந்தார். 

பைஜாமா உடை அணிந்து மீட்டிங்கில் கலந்துகொண்ட ஜெஃப் பெஸோஸ்வின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆனது. அயல்நாட்டவர் இந்த உடையை அணிவதற்கான அவசியம் என்ன, ஏன் போன்ற சந்தேகக் கேள்விகளை நெட்டிசன்கள் முன்வைத்து, விவாதிக்கவும் தொடங்கிவிட்டர். விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள ஜெஃப் பெஸோஸ், அதற்கான காரணத்தை தெளிவுபடுத்தியிருக்கிறார். 

இது தொடர்பாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் குழந்தைகளுக்கு எதிரான புற்றுநோய் விழிப்பு உணர்வு மாதமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அமேசானும் அமெரிக்கன் சைல்ட்ஹூட் கேன்சர் அமைப்புடன் இணைந்து ஆண்டுதோறும் விழிப்பு உணர்வு நிகழ்ச்சியை நடத்தும். அமெரிக்காவில் 4 முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பதற்குப் புற்றுநோய் இரண்டாவது பெரிய காரணமாக உருவெடுத்து உள்ளது. இதனால், விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் விதமாக அமேசான் செயல்பட்ட விரும்பியதன் காரணமாகத்தான் பைஜாமா உடை அணிந்ததாக விளக்கம் அளித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!