இந்தியாவில் சமூக ஆர்வலர்களுக்கு எதிரான அச்சுறுத்தல் அதிகம்! - ஐ.நா அறிக்கை

இந்தியா, சீனா, மியான்மர் போன்ற நாடுகளில் சமூக ஆர்வலர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதாக ஐ.நா அறிக்கை வெளியிட்டுள்ளது. 

ஐ.நா

இந்தியா, இஸ்ரேல், ஜப்பான், ரஷ்யா உள்ளிட்ட 38 நாடுகள் கொண்ட பட்டியலை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது. இந்த நாடுகளில் மனித உரிமை ஆர்வலர்களுக்கு எதிராகச் சட்டவிரோத கொலை, சித்ரவதை, கைது போன்ற பல அச்சுறுத்தல்கள் அதிகமாக நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக ஐ.நா பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டர்ஸ் வெளியிட்டுள்ள 9-ம் ஆண்டு அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் சமூக ஆர்வலர் குர்ராம் பர்வேஸ் மீது இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜூன் 2016 முதல் ஏப்ரல் 2018 வரை காஷ்மீரில் நடைபெற்று வரும் மனித உரிமைகள் நிலைமை குறித்து ஐ.நா உயர் ஆணைய அலுவலகம் தயாரித்த அறிக்கை இதற்கு ஆதாரமாக வழங்கப்பட்டுள்ளது. 

சட்டம், அரசியல், நிர்வாகம் போன்றவற்றுக்காக சமூக ஆர்வலர்கள் மறைமுகமாகப் பழிவாங்கப்படுவதாகவும் இது போன்ற நடவடிக்கைகள் அல்ஜீரியா, பக்ரைன், எகிப்து, இந்தியா, சீனா, இராக், ஜப்பான், மெக்ஸிகோ, மியான்மர், சவுதி அரேபியா, ருவாண்டா, தாய்லாந்து, மொராக்கோ ஆகிய நாடுகளில் அதிகம் நடந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!