கடலோர மாகாணங்களைக் குறிவைத்த புளோரன்ஸ் புயல்! போராடும் டால்பின்!

 கடலோர பகுதி மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 17 லட்சம் மக்கள் அவசர அவசரமாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

அட்லாண்டிக் கடல் பகுதியில் புதிய புயல் சின்னம் ஒன்று உருவாகியுள்ளது. அதற்கு புளோரன்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. புளோரன்ஸ் புயல் இன்று கரோலினா மாகாணத்தைக் தாக்கும் என்று அந்நாட்டு வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருந்தது. 

புளோரன்ஸ்

புளோரன்ஸ் புயல் பாதிப்பால் அமெரிக்காவின் Wilmington நகரக் கடலோர தெருக்களில் கடல் நீர் புகுந்திருக்கிறது. பல இடங்கள் மின்சாரம் இல்லாமல் மூழ்கியுள்ளது. புயல் மணிக்கு 90 மைல் வேகத்திற்குத் தாக்கும் எனச் சொல்லப்பட்டிருப்பதால் கடலோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு ஏற்கனவே எச்சரிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கரோலினா மாகாணத்திலுள்ள கடலோரப் பகுதி மற்றும் தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் 17 லட்சம் மக்கள் அவசர அவசரமாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, விர்ஜினியா ஆகிய மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 

இந்த நிலையில் Wrightsville Beach இருக்கிற கடலோரப் பகுதிகளில் கடல் நீர் புகுந்தது. அதில் கடலில் இருந்து நிலப்பரப்பிற்குள் நுழைந்த டால்பின் ஒன்று எதிர் நீச்சல் போட்டு மீண்டும் கடலுக்கு செல்லப் போராடும் காணொளி ஒன்று வெளியாகியிருக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!