ப்ளோரன்ஸ் புயல் இறப்புகுறித்த முதல் தகவலை வெளியிட்டது வில்மிங்டன் காவல்துறை!

பாதிப்பு அதிகமாக இருக்குமெனவும், மக்கள் எல்லோரும் பாதுகாப்பாய் இருக்கும்படி வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.

ப்ளோரன்ஸ் புயல் காரணமாக, அமெரிக்காவின் கடலோர மாகாணங்களான வடக்கு கரோலினா மற்றும் தெற்கு கரோலினா மாகாணங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுவருகின்றன. மாகாணத்தின் பல இடங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை 2,100 விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. மணிக்கு 90 மைல் வேகத்தில் புயல் வீசுவதால், வீடுகள் இடிந்திருக்கின்றன. கடல் நீர் ஊருக்குள் புகுந்திருப்பதால் பாதிப்பு அதிகமாக இருக்குமெனவும், மக்கள் எல்லோரும் பாதுகாப்பாய் இருக்கும்படி வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. மீட்புப் பணிக்காக சுமார் 7000 வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். புயலுக்கு இடையில் மீட்புப் பணிகள் நடந்துவருகின்றன.

ப்ளோரன்ஸ்

இதற்கிடையே, ப்ளோரன்ஸ் புயல் தாக்குதலில் இறப்புகுறித்த முதல் தகவலை வில்மிங்டன் நகர காவல்துறை அதிகாரபூர்வமாக ட்விட்டரில் அறிவித்திருக்கிறது. புயலின் தாக்குதலில் வீட்டின்மீது விழுந்த மரத்தால், தாய் மற்றும் ஒரு குழந்தை இறந்துவிட்டதாகவும் காயமடைந்த கணவரை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டிருப்பதாகவும் அறிவித்திருக்கிறது.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!