`நெருங்கும் மங்குட் புயல்!’ பிலிபைன்ஸை தொடர்ந்து சீனாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை #Mangkhut

பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய மங்குட் புயல் அடுத்ததாக சீனாவின் தெற்கு பகுதி நோக்கி நகர்ந்து வருகிறது.  இதனால் அந்நாட்டிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. 

மங்குட்

பிலிபைன்ஸ் நாட்டில் மையம் கொண்டிருந்த மங்குட் புயல் அந்நாட்டில் உள்ள முக்கிய தீவான லூசனின் வட கிழக்கு பகுதியில் உள்ள பாக்கோ என்ற இடத்தில் கரையை கடந்தது. தற்போது அங்கு பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. இந்த புயலால் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கபட்டுள்ளது. புயல் சேதங்களை கணக்கிடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. லூசன் தீவில் உள்ள கிராங்களுக்கு செல்லும் பெரும்பாலான சாலைகள் துண்டிக்கபட்டுள்ளன. சுமார் ஐந்து லட்சம் பேர் மங்குட் புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சம் பேர் வரை முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

புயலின் தாக்கம்

மணிக்கு 200 கி.மீ வேகத்தில் காற்று வீசியதால் பெரும்பாலான விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளன. இந்த ஆண்டில் வீசிய பெரும் புயல் இது என கூறபட்டுள்ளது. இதனால் இந்த புயலின் சேதம் மிக அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும் பிலிபைன்ஸில் பல ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். அங்கு  தொடர்ந்து முழு வேகத்தில் மீட்புபணிகள் நடைபெற்று வருகின்றன. 

வெள்ளம் சூழ்ந்த சாலை

மங்குட் புயல் கரையை கடந்த நிலையில் இன்னும் அது வலுவிழக்காமல் சீனாவின் தெற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் ஹாங்காங் பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கபட்டுள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!