`கழன்று விழுந்த ரோலர் கோஸ்டர் சக்கரங்கள்!’ - 50 அடி உயரத்தில் தொங்கிய சிறுவர்கள்

இங்கிலாந்தில் உள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் ரோலர் கோஸ்டர் திடீரென செயலிழந்ததால் சுமார் 2 மணி நேரம் சிறுவர்கள் அந்தரத்தில் இருக்கும் நிலை ஏற்பட்டது. 

ரோலர் கோஸ்டர்

Photo Credits : Twitter/@Watersun555

இங்கிலாந்தில் உள்ள வாரிங்டன் நகரில் குலிவெர்ஸ் வோல்ட் (Gulliver's World) என்ற கேளிக்கை பூங்கா உள்ளது. இங்கு ரோலர் கோஸ்டர் சுற்றிக் கொண்டிருக்கும்போது திடீரென நின்றுவிட்டதால் குழந்தைகள் உட்பட 21 பேர் சுமார் 50 அடி உயரத்தில் 2 மணிநேரம் தொங்கும் சூழ்நிலை ஏற்பட்டது. பிறகு உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து 5 குழுக்கள் கேளிக்கை பூங்காவுக்கு விரைந்தனர். இதையடுத்து சில ஏணிகளின் உதவியுடன் சிறுவர்கள் உள்பட 21 பேரும் மீட்கப்பட்டனர். 

ரோலர் கோஸ்டருக்கு அருகில் நின்றுகொண்டிருந்த ஒரு தாய் இது பற்றி கூறும்போது, `` ரோலர் கோஸ்டரின் இரண்டு சக்கரங்கள் கழன்று விழுந்தன. அதனால், திடீரென ரோலர் கோஸ்டர் நின்றுவிட்டது. எனது 7 வயது மகளும் அதில் இருந்தான். ரோலர் நின்றவுடன் குழந்தைகள் பயத்தில் அழத்தொடங்கிவிட்டனர். முதல் 20 நிமிடங்களுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அனைவரும் திகைத்தனர். பிறகுதான் தீயணைப்பு வீரர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஒரு தாயாக எனக்கு இந்தச் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. சரியில்லாத ரைடர்களை சீரமைத்து இயக்க வேண்டும்” எனக் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!