ஐ.நா-வின் மனித வளர்ச்சிக் குறியீடு பட்டியலில் முன்னேறிய இந்தியா!

ஐக்கிய நாடுகள் சபை சார்பில் வெளியிடப்பட்ட, மனித வளர்ச்சி குறியீட்டில் இந்தியா 130-வது இடத்தைப் பிடித்துள்ளது.

ஐ.நா

 ஐ.நா.சபை சார்பில், மனித வளர்ச்சிக் குறியீடு பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டம் மற்றும் தெற்கு ஆசிய அமைப்பும் இணைந்து உலக அளவில் மனித வளர்ச்சி குறியீடு கணக்கீடு நடத்தியது. இதில், மொத்தம் 189 நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில், இந்தியா கடந்த ஆண்டைவிட, தற்போது ஒரு படி முன்னேறி 131-ல் இருந்து 130வது இடத்தைப் பிடித்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் முறையே 134, 150 ஆகிய இடங்களைப் பிடித்துள்ளது. கடந்த 2016-ம் நடந்த கணக்கீட்டில் இந்தியா 0.624 புள்ளிகளைப் பெற்றிருந்தது. ஆனால், தற்போது 0.638 புள்ளிக்கு முன்னேறியுள்ளது. இந்த மதிப்பீடானது மூன்று வெவ்வேறான கோணங்களில் பட்டியலிடப்படுகிறது. நீண்ட நாள் ஆரோக்கியமான வாழ்வு, அனைத்தையும் அணுகும் அறிவுமுறை மற்றும் வாழ்க்கைத் தரம் என மூன்றும் முக்கியமானதாகும்.

உலக அளவில் அனைத்து நாடுகளும் மனித வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஜெர்மனி மற்றும் நார்வே போன்ற நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. தெற்கு சூடான், நிகர் மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் கல்வி, மருத்துவம் மற்றும் பொருளாதார ரீதியிலும் பின்னடைந்து காணப்படுகின்றன. 1990 முதல் 2017 வரையிலான கால இடைவெளியில் இந்தியாவின் பிறப்பு விகிதம் அதிகரித்தால் இதன் வளர்ச்சி மந்தமானது. இது தொடர்பாக, ஐ.நா கூறுகையில் ``இந்தியாவில் பாலின பாகுபாடு அதிகமாக உள்ளது. இந்திய நாடாளுமன்றத்தில் பெண்கள் 11.6 சதவிகிதம் மட்டுமே உள்ளனர். 39 சதவிகித பெண்கள் மட்டுமே இரண்டாம் தர கல்வி வாய்ப்பை பெறுகின்றனர்; இதில் ஆண்கள் 64 சதவிகிதமாக உள்ளனர். பின்னர் கூலித் தொழிலிலும் ஆண்கள் 78.87 % மற்றும் பெண்கள் 27.27% உள்ளனர். இந்தியா இந்த பாகுபாடு இல்லாமல் முன்னேறினால்  விரைவில் 127வது இடத்தைப் பிடித்து விடும்'' என்று தெரிவித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!